முதன்முதலாய்
பாத்திமா டீச்சரை காதலித்தேன்
பின்னர்
பதினாறு யுவதிகளைப் புணர்ந்தேன்…
ஆனாலும் இந்த முதன்முதலாய்
இளையர் முதன்முதலாய்
பீர் குடித்த நாளின்
நுரைநுரைப்பு போல் இல்லை
கன்னியர் முதன்முதலாய்
தாவணி கட்டிய நாளின்
கிளுகிளுப்பு போல் இல்லை
ஒரு வழக்கமான நாளெனவே இருந்தது…
பார்த்து, பேசி, பழகி
பரிச்சயம் கொண்டது போல்
எப்படி நிகழும்
ஆனாலும் இது முதன்முதல் சந்திப்பு!
முதன்முதலாய்
உன்னை பார்த்தேன்!
ஒளிபொருந்திய உன் கண்களை!!
அன்றைய இரவில்
நிலா
முதல் நாள் பிறையாகதான் இருந்தது
நீதான்
பலநாள் பவுர்ணமியாக இருந்தாய்…
நீ நீ
என் பால்ய தோழியா
என் மூன்றாவது தங்கையின் அறைவாசியா
என் அத்தை வீட்டில் வளர்ந்தாயா
என் மலைப்பயணங்களில் உடனிருந்தாயா
எனது திருவிழாக்களில் கலந்துக்கொண்டாயா
இல்லையென்றால்
என்னுடன் பள்ளிகூடம் பயின்றாயா
என்னை காதலித்து ஏமாற்றினாயா
இன்னும் இல்லையென்றால்
என்னுடன் 12 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு
என் நினைவுகளிலிருந்து
உன்னை மட்டும் அழித்துவிட்டாயா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக