22 டிசம்பர் 2022

இங்ஙனம் மயங்குதல்

நான் ஆதாம்
நான் ராஜா
நான் ஆண்
 
நீ ஏவாள்
நீ ராணி
நீ பெண்
 
நாம் வாழ வேண்டும்
நாம் ஆள வேண்டும்
நாம் புல்ல வேண்டும்
 
நான் பக்காடி லெமன்
நீ லெஹர் சோடா
நாம் போதை கொள்ள வேண்டும்
 
- மகேஷ் பொன்

 

கருத்துகள் இல்லை: