அடக்குமுறைக்கு எதிராக
வல்லாதிக்கத்திற்கு எதிராக
முறுக்கிய கையை உயர்த்தினார்கள்
ஒருவன் மட்டும்
கூர்வாளை உயர்த்தினான்
புரட்சி;
எப்போதுமே இரத்த நெடி வீசுவது
அப்படித்தான் அவன்
நீல இரத்தத்தில்
நீதியை எழுதினான்
பின்னர்
சட்டம்; சமத்துவம் கொண்டது
சமூகம்; சுதந்திரம் கொண்டது
ஆதலால்தான்
அவனது ஆறாம் விரல்
வெறும் எழுதுகோல் அல்ல
ஒரு கூர்வாள் என்றானது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக