இன்று ஒரு ரம்மியமான நாள்
எமதர்மன் தனது பாசக்கயிறை
ஆதலால்தான்
தேவலோக ரதி அவள்
பூலோக வீதியில் உலவுகிறாள்
திரும்பி பார்த்தாக வேண்டும்
அப்படி ஒரு முகவெட்டு...
லயம் பிசகாத செய்நேர்த்தி அவள்
பொன் வண்ண மேனி
கார் வண்ண கூந்தல்
தேனுறும் இதழ்கள்
பாலுறும் பல்வரிசை
சிறுத்த இடை
பெருத்த மல்லை
சேதாரமற்ற ஒய்யாரம் அவள்
மென்னகை ததும்புகையில்
கன்னத்தில் குழி விழுகிறது…
அவள் கண்களை உற்று நோக்கினால்
அதில் அபயக்குரல்கள் கேட்கிறது
பேரழகின் முன்
யாவும் ஸ்தம்பித்து நிற்கிறது
பல்சர்220ல் வந்த ஒருவன் மட்டும்
பார்த்த மனம் பார்த்தவண்ணம்
இப்பரபரப்பான சாலையில்
கனரக வாகனத்தின் சக்கரத்தில் புகுந்து
அப்பேரழகியைக் கடந்து போகிறான்.
இன்றைய ரம்மியத்தை
சங்கு ஒலிக்கத் தொடங்குகிறது…
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக