என்னிடம் ஒரு சொல் இருந்தது
அது அத்தனை சாது
அதற்கு எந்த தீவீரமும் தெரியாது
ஆனாலும் அச்சொல்லுக்கு
ஒரு உயரியப் பொருள் இருந்தது
அதைக் கேட்பார்தான் யாருமில்லை
இன்று அது வீதியில் இறங்கி
தனியே கையை உயர்த்தி
தன் பொருளை உரக்க கத்தியது
எவ்வளவு கத்தியப்போதும்
பெரும் கூச்சலின் நடுவே
சரியாக யார் காதிலும் உறைக்கவில்லை
என் நாடு
என் உரிமை
என் நீதி
சமத்துவம்
சகோதரத்துவம்
என ஆளாளுக்கு ஒருவாறு புரிந்துகொண்டனர்
அந்த சொல்லும் சளைக்காமல்
அத்தனைக்கும் பொருளாகி நின்றது
இனி
அடக்குமுறைக்கு எதிராக
”அல்லாஹூ அக்பர்” என்றாலும்
பொருத்தமாகதான் பொருள் தரும்…
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக