22 டிசம்பர் 2022

நள்ளிரவுப் பூனை

வெளியில் என்ன சத்தமென
அறையின் கதவைத் திறக்கிறேன்
மரங்கள் பேயாட்டம் ஆடின
புள்ளினங்கள் சத்தத்துடன் பறந்தன
மழை ஊத்தத் தொடங்கியது
கடலலை மேலும் ஆர்ப்பரித்தது
தூரத்தில் நாய் ஊளையிட்டது
 
அப்படியே கதவைச் சாத்திக்கொண்டேன்
யாரும் வரவில்லை
எல்லாம் இருந்தபடியே இருந்தது
நிலைக்கண்ணாடியில் ஒட்டியிருந்த
ஸ்டிக்கர் பொட்டை மட்டும் காணவில்லை
வந்தது நீயா? பேயா?
ஆண்கள் பொட்டு வைப்பார்களா என்ன
 
- மகேஷ் பொன்

 

கருத்துகள் இல்லை: