உண்மையைச் சொல்பவனுக்கு நயன்தாரா மூன்றாவது மனைவி

  

    ஒரு கணவனும் மனைவியும் காட்டுக்குள் மரம் வெட்ட சென்றார்கள். அங்கே ஒரு பெரிய ஆற்றைக் கடந்து போய் மரத்தை வெட்டிக்கொண்டிருந்தார்கள். அப்போது பார்த்து மழை சோர்னு பெய்யத்தொடங்கவே ’ஆத்துல வெள்ளம் வாரதுக்குள்ள அக்கரைக்கு போய்ரனும்’னு ரெண்டு பேரும் வெட்டிய மரத்தையும் கோடாரியையும் அங்கேயே விட்டுட்டு வேக வேகமாக ஓடி வந்தார்கள். அதற்குள் ஆற்றில் பாதி வெள்ளம் வந்துவிட்டது. ’கொஞ்சம்தான வெள்ளம் வருது வா வெரசா அக்கரைக்கு போயிரலாம்’னு கணவன் மனைவியின் கையைப் பிடித்து ஆற்றுக்குள் இறக்கினான். நடு ஆற்றில் வரும் போது வெள்ளம் அதிகமாக வந்து இரண்டு பேரையும் அடித்துக்கொண்டுப் போய்விட்டது. மனைவி கையை இறுக்கமாக பிடித்திருந்தும் எப்படியோ கையைவிட்டு தண்ணீரோடு போய்விட்டாள். கணவன் எப்படியோ நீந்தி சிரமப்பட்டுஅக்கரைக்கு வந்து சேர்ந்துவிட்டான். மனைவி எங்கேயாவது தண்ணீரில் அடித்துப் போகிறாளா என அங்கும் இங்கும் தேடி பார்த்தான் தெரியவே இல்லை. ’வெள்ளத்தில் மூச்சுமுட்டி செத்திருப்பாளோ’னு ரொம்ப கவலையாக கண்ண கசக்கிகொண்டே ’எப்படியாவது என் மனைவிய காப்பாத்து கடவுளே’னு வேண்டிக்கொண்டான்.
 
    அப்போது ஒரு வனதேவதை தோன்றி. ’மானிடனே ஏன் அழுதுகொண்டிருக்கிறாய் என்ன பிரச்சனை’ என கேட்டது. இவனும் நடந்ததை சொன்னான். அதற்கு வனதேவதை 'கவலைப்படாதே நான் உன் மனைவியை மீட்டுத்தருகிறேன்' என்று செயலில் இறங்கியது. நடு ஆற்றுக்குள் சென்ற வனதேவதை நீருக்குள் முங்கி உள்ளிருந்து திரிஷாவை தூக்கி காண்பித்து ’இவளா உன் மனைவி’ என்றது. இவன் ’இல்லை’ என்றான். இண்டாவது முங்கிய வனதேவதை நயன்தாரவை தூக்கி காண்பித்தது. இதுவும் ’என் மனைவி இல்லை’ என்றான். மூன்றாவதாக அவனது மனைவியையே தூக்கி காண்பித்தது. ’இதுதான் என் மனைவி’ என்றான். மூவரையும் கரைக்கு கூட்டிவந்த வனதேவதை’ நீ உண்மையை சொன்னதால் திரிஷாவும் நயன்தாரவும் உனக்கு மனைவியாக இருப்பார்கள். இன்றிலிருந்து உனக்கு மூன்று மனைவி மூவரையும் வீட்டிற்கு அழைத்து போ’ என்று கூறி மறைந்தது. மூவரையும் வீட்டிற்கு அழைத்து வந்த அவன் திரிஷாவோடும் நயன்தாராவோடும் மனைவியோடும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தான். 
 
    ’இந்த ஊர்லேயே இல்லாத அழகில் அதுவும் மூன்று மனைவி இவனுக்கு மட்டும் எப்படி கிடைத்தது. நமக்கும் ஒன்னு வந்து வாச்சிருக்கு பாரு’ என பக்கத்து வீட்டுக்காரன் பொருமத் தொடங்கினான். ஒரு நாள் அவனிடமே அழைத்துக் கேட்டான் ’உனக்கு மட்டும் எப்படி எக்ஸ்ட்ரா ரெண்டு அழகான மனைவிகள் கிடைத்தனர்’ என்று. இவன் காட்டுக்குள் மரம் வெட்டப் போனதையும் வனதேவதை வந்து திரிஷாவையும் நயன்தாராவையும் மனைவியாக தந்து போனதையும் சொன்னான்.
 
    மறுநாளே பக்கத்து வீட்டுக்காரன் தன் மனைவியை கூட்டிக்கொண்டு காட்டுக்குள் மரம் வெட்டக் கிளம்பிவிட்டான். ஆற்றுக்கு அந்தப்பக்கம் மனைவியை கூட்டிக்கொண்டுப் போனான். அப்போது மழையும் வரவில்லை. இருந்தாலும் திரும்பி வருகிறபோது அவனே அவளை ஆற்றுக்குள் ஆழத்தில் தள்ளி விட்டுவிட்டான். இக்கரைக்கு வந்து சோகமாக முகத்தை வைத்துகொண்டு ‘கடவுளே என் மனைவியை காப்பாத்து, என வேண்டினான்.
அப்போது வனதேவதை அவன் முன்பு தோன்றி ‘என்ன வேண்டும் மானிடனே’ எனக் கேட்டது. அவன் தன் மனைவி ஆத்து நீரில் அடித்து செல்லப்பட்டதாகவும் அவளை மீட்டுத்தருமாறும் கூறினான். செயலில் இறங்கிய வனதேவதை நடு ஆற்றுக்குள் சென்று நீருக்குள் முங்கி உள்ளிருந்து அவன் மனைவியை தூக்கி காண்பித்தது. சற்றும் எதிர் பார்க்காத இவன் 'இது என் மனைவி இல்லை இல்லை’ என பொய் சொன்னான். இண்டாவது முங்கிய வனதேவதை முகம் எல்லாம் கோணலாமானலான முடிகூட இல்லாமல் ரொம்ப அசிங்கமான ஒரு பெண்ணை தூக்கி காண்பித்து ’இவளா உன் மனைவி’ என்றது. ’இது என் மனைவி இல்லவே இல்லை’ என்றான். மூன்றாவதாக பயங்கரமான கருப்பாக தெத்துப்பல்லுடன் குஸ்டம் பத்திய ஒரு பெண்ணை தூக்கி காண்பித்து ’இவளா உன் மனைவி’ என்றது. ’இது இல்லை இல்லை’ என கதறிய பக்கத்துவீட்டுக்காரன் ’முதலில் காண்பித்ததுதான் தன் மனைவி’ என உண்மையை ஒப்புக்கொண்டான். அபோது அந்த அசிங்கமான இரு பெண்களும் அழகாக மாறிவிட்டார்கள். அதில் ஒருத்தி தமன்னா இன்னொருத்தி கீர்த்திசுரேஷ். பக்கத்துவீட்டுக்காரன் வாயைப்பிளந்தான். மூவரையும் கரைக்கு கூட்டிவந்த வனதேவதை ’நீ பொய் சொன்னதால் உன் மனைவி கூடவே நீ நீடுழி வாழ்க’ என்று கூறி தமன்னாவையும் கீர்த்திசுரேஷையும் கூட்டிக்கொண்டு மறைந்துப் போனது.
 
- நவின வாய்மொழிக் கதை பதிவு  - செ.நிவிதா
- கதையின் நீதி : பொய் சொல்லக்கூடாது


கருத்துகள் இல்லை: