நீ
காயத்திற்கு டிஞ்சர்தான் தடவினாய்
நான்
அதற்குதான் மயங்கினேன்…
நீ
எத்தனைக் கனிவாக நடந்துகொண்டாய்
தெரியுமா
நான்
என் தாயின் கனிவை
காய் என்று ஒதுக்கி வைக்கும் அளவுக்கு…
ஒரு நோயாளியின் முன்பு
நீ
மாஸ்க்கை கழட்டிவிட்டு
புன்னகைத்திருக்கக்கூடாது
இப்போது பார்
வைரஸ் பரவி பரிதவிக்கிறேன்…
நான் இனி
மருத்துவர்களைக்
கண்டுக்கொள்ளமாட்டேன்
ஆனால்
உனது தெய்வாம்சம் கருதி
செவிலியர் யாவரையும்
கையெடுத்து கும்பிடுவேன்…
எனக்கு நேர்ந்த விபத்து
ஏதோ கொலைமுயற்சி என
சந்தேகித்துக்கொண்டிருந்தேன்
உன்னைப் பார்த்தப் பிறகு
அது ஒரு நல்ல முயற்சி என
சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்…
எனக்கு மாத்திரைகள் சாப்பிட்டு
பழக்கமில்லை
இனி
பழகிக்கொள்கிறேன்
என் நோய் எதிர்ப்பு சக்தியைதான்
நம்பிக்கொண்டிருந்தேன்
இனி
உன்னையே நம்புகிறேன்
நீ சொல்
சாப்பாட்டுக்கு முன் எது
சாப்பாட்டுக்கு பின் எது
இரவுக்கு உன்னையே விழுங்கி
தண்ணீர் குடித்துக்கொள்கிறேன்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக