22 டிசம்பர் 2022

ஆனாலும் காதலிக்கிறேன்

ஈருடல் ஓருயிர் நட்புதான்
12 பொருத்தங்களும் உண்டுதான்
 
ஒரே அறையில்
நீ உடை மாற்றிக்கொண்டிருக்கிறாய்
நான் புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறேன்
 
என் பார்வையின் முன்
நீ வெட்கம் கொண்டதில்லையே
உன் நிர்வாணத்தின் முன்
நான் இச்சைக் கொண்டதில்லையே
 
உடன் நடப்பதும்
ஒரு அரவணைப்பும்
ஒரு முத்தமும்
கற்பை கலங்கம் செய்யாதிருக்கட்டும்
 
எல்லா முத்தங்களும்
காமம் உடைத்தல்ல
அன்புடைத்தும் மிஞ்சும்
சில முத்தங்கள்
 
எல்லா முத்தங்களிலும்
சர்க்கரைதான் இனிக்க வேண்டுமா
ஒரு முத்தத்தில்
உப்பும் உவர்க்கட்டுமே
 
உன்னால் கூடுமா என்ன
என்னுடன் புணர?
 
மிஞ்சும் போதையில் வந்தாலும்
துஞ்சும் நின் ஆடைகள் கலைந்து
நான் நான்
எங்ஙம் புணர்வேன் என் செல்லமே!
 
- மகேஷ் பொன்


கருத்துகள் இல்லை: