பெரும் துயரினை
கடந்துசெல்லும் தூரத்திலிருந்த
ஒரு துயரென ஆகிவிட்டது...
இன்று இவ்வூரில்
எங்குமே மகிழ்க்கூடங்கள் இல்லை
நுரைப்பொங்கிய ஞாபகங்களுடன்
ஒவ்வொரு மதுக்கடையையும்
ஒரு கவிஞனாக
எவ்வாறு கடந்து போவேன்...
இதே நாளில்
அக்கா மகள் குறித்து
இவ்வூர் அலர் கொண்டுள்ளது
இப்போது
ஒரு போத்தல் பீர் வேண்டும்!
ஒரு பொக்கே மலர் வேண்டும்!!
இவ்வூரடங்கு காலத்தில்
பரிவுடையோரின் கருப்பு கோப்பை
முதல் சுற்றிலேயே
பத்தாவது சுற்றுக்கு இழுக்கிறது
ஆதலால்
என் கோப்பையின் மதுவில்
அந்த பொக்கேயிலிருந்து
நறு மலர்களைப் பிய்த்து தூவுங்கள்
இவ்வூர் மேலும் அலர் கொள்ளட்டும்...
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக