22 டிசம்பர் 2022

போதை இரவு

நேற்றைய இரவில்
நான் சமநிலையில் இல்லை
அதனால் சொன்னதெல்லாம்
உண்மையாக இருக்கக்கூடும்
ஆனாலும் நீ
வேண்டாதவற்றை விட்டுவிடலாம்
ஏனெனில்
இன்று எனக்கு
எதுவும் நினைவில் இல்லை
 
இப்போது
சுயநினைவுடன் சொல்கிறேன்
என் மூன்றாவது தங்கையின்
சாயல் உனக்கு…
 
- மகேஷ் பொன்

 

கருத்துகள் இல்லை: