இப்போது என் நோய் நீங்கி
முற்றிலும் குணமடைந்துவிட்டேன்
மருந்து சாப்பிட்டதாலோ
இல்லவே இல்லை …
என்னை கையாண்ட செவிலியிடம்
அத்தனைப் பரிவு இருந்தது
எத்தனை ஊசிகளை குத்தினாலும்
எனக்கு வலிக்கப் போவதில்லை
அவள் அழகாக வேறு இருந்தாள்
ஆதலால் நான்
இன்னோரு புதிய நோயுடன்
அங்கே திரும்பிப் போவேன்...
பின்நாட்களில்
எனக்கு ஒரு தீரா நோய் வரக்கூடும்
இன்று
சிறிது காய்ச்சல்தான் அடிக்கிறது
அவளின் ஒரு செல்ஃபியை மட்டும்
புலனத்தில் அனுப்பித் தாருங்கள்
நான் உடனே குணமடைந்துவிடுவேன்..
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக