காடு
இரைந்துகொண்டே இருக்கும்
அதன் ஆங்காரம் ஏறி இறங்க
அமைதி நிலவியதும்
அரை நாழிகைக்குள்
சடசடவென மழை பெய்யும்
அல்லது
எதிர் முகட்டில்
பெரும் பாறை சரியும்…
கொடும் விலங்கும்
சிறு பறவையும்
சில் வண்டும்
அதனதன் பெற்றடையும்
நாம்
தீக்கணப்பு கட்ட
காய்ந்த தடி சேகரிக்க வேண்டியது …
- - திவ்யா ஈசன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக