07 டிசம்பர் 2023

துப்பட்டா வீடு X மணல் வீடு

அந்த கடற்கரையில்

திரும்பிய பக்கமெல்லாம்

காதலர்கள் இருந்தார்கள்

 

அவர்கள் துப்பட்டாவில்

கூரை வீடு கட்டி

ஏதோ ஒரு விளையாட்டை

விளையாடிக் கொண்டிருந்தார்கள்

அதில் பள்ளி சிறுமியும் ஒருத்தி

 

நான்

என் மாமாவுடன் சென்றதால்

மணல் வீடு கட்டித்தான்

விளையாட முடிந்தது

 

பச்… அவமானம்

அடுத்த முறை

காதலனுடன்தான் செல்ல வேண்டும்

 

முதலில்

யாரையாவது காதலிக்க வேண்டும்

 

   - திவ்யா ஈசன்


 

கருத்துகள் இல்லை: