07 டிசம்பர் 2023

அலைக்கரங்கள்

கடல்

சிறுசிறு அலைகளை அனுப்பி

என்னை அழைத்தபடி இருந்தது…

நான்

நின்றுகொண்டே இருந்தேன்

 

பின்பு

ஒரு பெரிய அலையை அனுப்பி

என் பாதம் தொட்டு அழைத்தது…

மரியாதை நிமித்தம்

நடுக்கடலுக்குள் போய் வர வேண்டும்…

 

-          - திவ்யா ஈசன்


 

கருத்துகள் இல்லை: