07 டிசம்பர் 2023

இன்னும் சிரிப்பேன்

என் இருக்கையில்

என்னை அமரவிடவில்லை

கடைசி இருக்கையில் கூட

எனக்கு இடம் தரப்படவில்லை

வாசலுக்கு வெளியே

கழுத்தைப் பிடித்து தள்ளியதைப் போல்

புறக்கணிக்கப்பட்டேன்

அதனால் என்ன

அந்த வளாகத்தின் எதிரே

பார்க்கில் நிறைய இருக்கைகள் இருந்தன

அங்கு வந்து அமர்ந்துகொண்டேன்

 

என் எதிரே

துன்பம் வரும் நேரங்களில் சிரிங்க

என்று சொன்னவன்தான்

புறக்கணிக்கப்பட்டதன்

வருத்தங்களைச் சுமந்தபடி

உம்மென்று அமர்ந்திருந்தான்

நான்

சிரித்துக்கொண்டுதான் இருந்தேன்

 

-                    - திவ்யா ஈசன்

 



 

கருத்துகள் இல்லை: