07 டிசம்பர் 2023

மழைச் சிறுமி

முதலில் நான்
ஒதுங்கிதான் நின்றேன்...

எனக்குள் இருந்த
மழையில் விளையாடும் சிறுமி
வெளிவரும் வரை
மழைதான்
நிற்காமல் பெய்தது...

பிறகு
நானும் பால்ய அவளும்
நனைந்தபடியே
வீடு வந்து சேர்ந்தோம்...

- திவ்யா ஈசன் 


 


கருத்துகள் இல்லை: