என்னிடம்
மூன்று நம்பிக்கைகள் இருந்தன
முதல் ஒன்று
அப்படிதான் பேசியது
ஆனால் மேடை ஏறுவதற்குள்
நேற்று அது
பிள்ளை பிடிப்பவன்
பின்னால் போய்விட்டது…
இரண்டாவது ஒன்று
பெரும் சிலுவையையும்
நிலுவையையும்
உடைத்துவிட்டு
இன்று அது
தேர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது…
மூன்றாவது ஒன்று
பேனாவால்
மண்டையை சொரிந்தபடி இருக்கிறது
நாளை அது
ஜெயிப்பேன் என்கிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக