25 நவம்பர் 2023

தலைக்கு மேல் வளர்ந்த மருமகள்

என் மருமகள்
எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறாள்
தெரியுமா?
 
எனது தாவறான முடிவை
திருத்தியமைக்கும் அளவுக்கு
 
என்னிடம் கூடுதலாக இருக்கும்
இருபது வருட அனுபவத்தை
மூட்டைக் கட்டி
பரணில் போடும் அளவுக்கு
 
இனி
ஏன்
ஏதற்கு
என்று கேள்வி கேட்காமல்
அவள்
பின்னாடியே போகும் அளவுக்கு
 
அவள் நிமித்தம்
என் அக்காவிடம்
பரிந்துப் பேசும் அளவுக்கு
என் மச்சானிடம்
சண்டையிடும் அளவுக்கு
 
அவள் எழுதும் கவிதையில்
நான் பிழை காணாத அளவுக்கு
 
- மகேஷ் பொன்

 

கருத்துகள் இல்லை: