சார்! ஒரு பத்து ரூபாய்
கம்மியா இருக்கு கிடைக்குமா?
தம்பி! தம்பி! ஒரு பத்து ரூபாய்
மட்டும்தான் தேவைப்படுது
பாரியின் பறம்பு மலையிலிருந்து
நேராக பாருக்குள் வருபவர்கள்
அவன் கஷ்டம் உணர்ந்து
கடைசிப் பத்து ரூபாயைக்
கொடுக்கத் தொடங்குகிறார்கள்
அந்த கடைசிப் பத்து ரூபாய்தான்
முதல் பத்து ரூபாய்
அந்த கடைசிப் பத்து ரூபாய்தான்
இரண்டாம் பத்து ரூபாய்
அந்த கடைசிப் பத்து ரூபாய்தான்
மூன்றாம் பத்து ரூபாய்
அந்த கடைசிப் பத்து ரூபாயை
பதின்மூன்று முறை வாங்கியவன்
பதினான்காம் முறை
’கடைசி பத்து ரூபாய்’ என யாசித்தான்
இப்போது
உண்மையில் அது
கடைசி பத்து ரூபாய்தான்….
நான்
பார்த்துக்கொண்டிருக்கும் போதே
”140ல ஒன்னு ”
என கேட்டு வாங்கியவன்
போயே போய்விட்டான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக