30 நவம்பர் 2023

திங்கட்கிழமையின் நுகக்கால்

போக வேண்டும் என்பது
குட்ட மாடு
போக வேண்டாம் என்பது
நெட்ட மாடு
இரண்டு சிந்தைகளையும்
வண்டியில் பூட்டினால்
ஒன்று முன் இழுக்க
ஒன்று பின் இழுக்க
நுகக்கால் ஏறிஇறங்கி கிடக்க
தார்க்கம்பு போட்டபடியே
என்னை வேலைக்கு ஓட்டிப்போகிறேன்
 
- மகேஷ் பொன்
 


கருத்துகள் இல்லை: