07 டிசம்பர் 2023

2000தில் இருந்து 1980க்கு

 


இன்னும் சிரிப்பேன்

என் இருக்கையில்

என்னை அமரவிடவில்லை

கடைசி இருக்கையில் கூட

எனக்கு இடம் தரப்படவில்லை

வாசலுக்கு வெளியே

கழுத்தைப் பிடித்து தள்ளியதைப் போல்

புறக்கணிக்கப்பட்டேன்

அதனால் என்ன

அந்த வளாகத்தின் எதிரே

பார்க்கில் நிறைய இருக்கைகள் இருந்தன

அங்கு வந்து அமர்ந்துகொண்டேன்

 

என் எதிரே

துன்பம் வரும் நேரங்களில் சிரிங்க

என்று சொன்னவன்தான்

புறக்கணிக்கப்பட்டதன்

வருத்தங்களைச் சுமந்தபடி

உம்மென்று அமர்ந்திருந்தான்

நான்

சிரித்துக்கொண்டுதான் இருந்தேன்

 

-                    - திவ்யா ஈசன்

 



 

சிரித்தப்படியே திசை மாறுவோம்

இன்னும் இரண்டு நாட்களில்

இந்த கல்லூரியின் கடைசி நாள்

எனக்கும் தான்

வெளியேறாவிட்டால்

வெளியேற்றப்படுவோம்

 

மிஸ் யூ சொல்லி கண்கலங்கும்

அன்பு உள்ளங்கள்

பின் நாட்களில்

மிஸ்டு கால் கொடுத்தால் போதும்

நல்லிரவு 12மணிக்குக் கூட

அழைத்துப் பேசுவேன்

 

மாலதி அக்கா

மைதீன் பாத்

எஸ்தர் மேம்

அகல்யா

பேச்சாத்தாள்

பாலா

கோபி

மை சோபி

உங்கள் எல்லோரையும்

அவ்வளவாக மிஸ்பன்ன மாட்டேன்

 

நான் மிஸ் பன்னுவதெல்லாம்

கல்யாண மண்டபம் மாதிரி இருக்கும்

அந்த செமினார் ஹால்

பிறகு

அந்த வகுப்பறை

அந்த கடைசி பெஞ்ச்

அந்த புன்னை மரம்

முக்கியமாக நூலகம்

இன்னும்

அந்த கேண்டீன்

அந்த பேருந்து நிறுத்தம்

 

அப்படியே

ராஜா பாடலை ஒலிக்கவிடும்

ஓட்டுநரையும்

கண்ணத்தில் குழி விழும்

நடத்துநரையும்

மிஸ் பன்னுவேன்

 

இந்த கல்லூரிக்கு

நான் ஒரு ஸ்பெசல் என்றார்

என் பேச்சை

என் சிரிப்பை

என் கலகலப்பை

என் திறனை

என் ஆளுமையை

இதற்கு முன்பு படித்தவர்களிடம்

பிரின்ஸிபல் பார்த்ததே இல்லையாம்

அந்த ஒரு பாராட்டுக்கு மயங்கிதான்

அவருக்கு

டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டராக

வேலைப் பார்த்துவந்தேன்

அப்பறம் படிப்பு

ஒரு ஓரமாக படித்துக்கொண்டிருந்தேன்

உங்களுக்கு மிஸ் யூ சார்

 

என்னைக் காதலித்த

அன்பு தம்பிகளுக்கு

பறக்கும் முத்தங்களைப்

பரிசளிக்கிறேன்

என் திமிருக்காக மட்டுமே

என்னைக் காதலித்தவனுக்கு

கூடுதலாய்

மொங்க பீர் வாங்கித் தருகிறேன்

 

எல்லோரிடமும்

நல்லுறவே பேணி வந்துள்ளேன்

கால் விரல்களால்

என் குதிங்காலைச் சுரண்டிய

ஒருவனிடம் மட்டும்

எரிந்துப் பேசியதோடு

நெடு நாட்களாக

பேசாமலே இருந்துவிட்டேன்

அவன் மீதும்

எந்த வருத்தங்களும் இல்லை

இப்போது

அவன் வந்து பேசினால்

முட்டித் தெரியச் சேலையை

தூக்கி காண்பிப்பேன்

இரண்டு சுரண்டுதானே

பாவம் சுரண்டிவிட்டு போகட்டும்

 

பெரும்பாலும்

தோழிகள் சமைக்கப் போவீர்கள்

தோழர்கள் வேலைக்குப் போவீர்கள்

நான்

விஜய் தொலைக்காட்சிக்கு

கண்டண்ட் ஆகப் போகிறேன்

பெரிய ஆளாகி நின்றால்

நீங்கள்இது என் ஃபிரண்ட்என

அங்கலாய்க்க வேண்டும்….

 

திடீரென

கல்யாணப் பத்திரிக்கையோடு

வந்து நின்றாலும் நிற்பேன்

அபோது

அந்த அங்கலாய்க்கும் வாய்ப்பு

உங்களுக்கு வழங்கப்படவில்லை

என்பதைப் புரிந்துகொண்டு

சுகர் தூக்கலாக போட்டு

ஒரு டீ போட்டுத் தரவேண்டும்….

 

-                    -  திவ்யா ஈசன்