19 ஏப்ரல் 2020

இது வில்லன்களின் காலம்


’இந்த தெய்வீகக் காதலை
யார் வந்து பிரித்துவிட முடியும்?’
என்ற எங்கள் இறுமாப்பை
கொல்லன் கை இரும்பென
வடிவம் திரித்துவிட்டாயே!
நல்ல வளர்ந்துவிட்ட செடியை
வேரோடு பிடுங்கி
வெந்நீரில் முக்கி
பாறையில் காயப்போட்டாயே!
உடைப்பட்ட காந்தமென
துருவங்கள் மாறினோம்
எப்போதும் ஒட்டவே முடியாதா?
மாமா நீ குணச்சித்திரன்
எப்படி வில்லன் ஆனாய்…
என்னவன் நாயகன்
இப்படி காமெடியன் ஆனானே…
இனி நீ என் நண்பன் அல்லன்
சாதா உறவினன் மட்டும்தான்…
எனக்கு செம கோபம் வருகிறது
உன் அக்கா வாழ்க்கை சூனியமாக!
உன் வாழ்க்கை விளங்காமல் போக!!

- திவ்யா ஈசன்

கருத்துகள் இல்லை: