14 ஜனவரி 2021

இப்படிக்கு காலம்சென்ற நாயகி


எனக்கு வேண்டுமென ஆராயாமல்
உனக்கு வேண்டாமென வழித்தப்பியதால்
உன்னை விட்டு வெகுதூரம் வந்துவிட்டேன்…
ஏறி வந்தேன் அறிவினில்
இறங்கி வந்தாய் அன்பினில்
இப்போது வயது சமன்கொண்டது
பெருந்தினை பொருந்திக்கொண்டது…
சித்தம் கலங்கிய நிலையில்
எனது வழிகளும் மறந்துவிட்டன
ஏதொவொரு வழியில்
எனக்கென வாய்த்த வழிகளும்
உன்னையே வந்து சேர்கின்றன…
எண்ணம் எல்லாம் பேருந்தேறி
உன்னை நோக்கியே வருகின்றன…
அன்பு அண்ணாச்சி கடையில்கூட கிடைக்கிறது
அரண் நீலநிற சட்டையில் ஆங்காங்கே நிற்கிறது
அத்தனைக்கும் கூகுல் எனக்காகவும் சுற்றுகிறது
ஆனாலும்
நின் யோக்கியதை அதையேதான் செய்கிறது…
வேறொரு அன்பில்
வேறொரு அழகில்
வேறொரு ஈர்ப்பில்
வேறொரு வாய்ப்பில்
எப்போதும் உடன்பாடில்லை எனக்கு…
இப்போதும் தடம் மாறாமல்
ஒரு துறவியைப் போல் நிதானித்திருக்கிறேன்
இத்தவத்தில் பொங்கும் ஒருவழித் தவிப்பை
நீ! நீயேதான் வழிநெடுக வழியவிடுகிறாய்…
என் கோப்பையின் மது
உன் குடுவையில் இருக்கிறது
நானும் உன்னை மட்டுமே யாசிக்கிறேன்
நீ இடாமல் என் பாத்திரமும் நிரம்பாது…
டேய்! புரியுதாடா லெளகிகி!!

- திவ்யா ஈசன்


கருத்துகள் இல்லை: