நீ செய்த துரோகத்தில்
என்ன நீதி இருக்கிறது
நீ செய்த குற்றத்தில்
என்ன நியாயம் இருக்கிறது
நீ செய்த புறக்கணிப்பில்
என்ன நேர்மை இருக்கிறது
நீ செய்த பாவத்தில்
என்ன பரிசுத்தம் இருக்கிறது
நான் சிறுமுகை என்றாலும்
உன் நறுமுகை அல்லவா
நீதானே பரித்திருக்க வேண்டும்
நீதானே முகர்ந்திருக்க வேண்டும்
நீதானே சூடியிருக்க வேண்டும்
விரியும் போதே
கரியும் போதானேன் பார்
நான் இளமகள் என்றாலும்
உன் குலமகள் அல்லவா
நீதானே பூவைத்திருக்க வேண்டும்
நீதானே பூஜித்திருக்க வேண்டும்
நீதானே புணர்ந்திருக்க வேண்டும்
வாழும் முன்னே
வீழும் முன்னானேன் பார்
நீ என்னை விட்டுப்போனது
பெரும் துரோகம்
நீ என்னை விட்டுப்போனது
பெரும் குற்றம்
நீ என்னை விட்டுப்போனது
பெரும் புறக்கணிப்பு
நீ என்னை விட்டுப்போனது
பெரும் பாவம்
நீ விட்டுப்போன இடத்தில்
அப்படியே கெட்டுப்போய் நிற்கிறது
நீ எனக்கென விட்டுப்போன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக