அதே மலைவீடு வேண்டாம்
அதே நிலவொளி வேண்டாம்
அதே கூதக்காற்று வேண்டாம்
அதே சாரல் வேண்டாம்
அதே காலை வேண்டாம்
அதே சூரியன் வேண்டாம்
அதே உறவுகள் வேண்டாம்
அதே தாயும் வேண்டாம்
ஆனாலும் எப்போதும் வேண்டும்;
பார்வையில் ஏற அதே போதை!
செவியில் விழ அதே சினுங்கல்!
முத்தத்தில் சுட அதே வெக்கை!
அணைப்பில் மீற அதே விரல்கள்!
மிகஅருகில் வீச அதே வாசம்!
ஆனால் இப்போது இருப்பது
மனதுக்குள் விம்ம
அதே காதல் மட்டும்தான்….
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக