14 ஜனவரி 2021

இது மழைக்காளான் என்றறிவானா


அவனுக்கு அக்காவாக இருந்தேன்
அவனுக்கு அத்தையாக இருந்தேன்
ஈடிணையற்ற தோழியாக இருக்கலாமென்று
அவனை மீண்டும் பிறக்கச் சொன்னேன்
பத்தாண்டுகள் முன் சென்று
அவனும் புரவியில் ஏறி புறப்பட்டான்
காலத்தை பின் தள்ளியபடி
இப்போது என் வீட்டு வாயிலில் வந்து
ஹாரன் அடிப்பது அவேனதான்
சாலை மேடு பள்ளமாக இருக்கிறது
வேகத்தடைகள் இருக்கிறது
கொண்டை ஊசி வளைவுகள் இருக்கிறது
தோளில் கை வைக்கவா
இடுப்பில் கைகள் கோர்க்கவா
ஒவ்வொரு குலுங்கலுக்கும் உரசிக்கொள்ளவா
அத்தனை ப்ரேக்குக்கும் அணைத்துக்கொள்ளவா
பல்சர்220 ஒரு பறக்கும் புரவி
அவனுடனான மலைப்பாதைப் பயணத்தில்
அது மனதை அலைபாயவிடுகிறது
ஆளரவமற்ற தனிமை முருகேற்றுகிறது
இந்த அடர் பசுமை
கண்ணில் நீலம் பூக்கச் செய்கிறது
இதழில் செஞ்சாயம் பூசுகிறது
வளர்ந்த புல்வெளியைக் கண்டால்
புரவி நின்று மேயாதா என்றிருந்தேன்
அப்போது ஒரு முத்தமிடதான் எண்ணினேன்
வனத்தில் மனதின் குறல் எதிரொலிக்குமோ
இப்போது புரவி நின்றது
அவன் எல்லை மீறி மேயத் தொடங்கினான்
மேகம் சூழ்ந்துகொண்டது
பனி புகைமூண்டது
இன்றுதான் கனமழை பெய்ய வேண்டுமா
என் மேநெற்றி குங்குமம் கரையுமளவுக்கு
 
- மகேஷ் பொன் 


கருத்துகள் இல்லை: