இன்றையப் பொழுதில் குளிர்ச்சியில்லை
புழுக்கம் மின்விசிறியைச் சுற்றவிடும்
பாவம் பரபரப்பு என்ன செய்யும்…
வீடு குரைக்கும் நாய்
அலுவலகம் கடிக்கும் நாய்
இரண்டுக்கும் இடையில்
ராஜாவின் ஐந்து பாடல்கள் தூரம்தான்…
ஓட்டுநரின் மிதமான வேகம்
சன்னலோர சாரல் காற்று
யுவதியின் தடுமாறும் விழிகள்
பயணம் அப்படியே நீளக்கூடாதாவென
ஒரு பெருமூச்சு விடுகையில்
விசில் ஓங்கி ஓலிக்கிறது
இறக்கத்தில் தள்ளிவிடப்படுகிறேன்…
ஏற்றப்படுகிறவன் முகத்திலும் காயமிருக்கிறது
சிறந்த ஒன்றைத் தேர்க
வொன்று வட்டமான வாழ்க்கை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக