02 பிப்ரவரி 2014

அழகை விற்பவள்

கோடை மழை!
இன்றலர்ந்த மலர்!
புதுப்படத்தின் முதல் காட்சி!
விழாக்காலப் புத்தாடை!
என்பனப் போல்
இவளின் அழகு நுகர ஈர்ப்பது...
இளமையைச் செலவிட்டு
வறுமையைச் சரிகட்ட
முடியாத செயலில்
அடியெடுத்து வைத்தாள்-
விடியாதா என்று.
பலரும் வந்து அணைப்பதால்
ஒரு நாள் அணைந்துவிடும்
எரியும் வரைதானே சுடரின் அழகு
பின்
வாழ்வாதாரமான அழகை
அழகு நிலையத்தாளும் மீட்ட முடியாது.
வந்தவர் இச்சை என்பர்
வராதார் கொச்சை என்பர்
புதைந்த ரகசியம் அறிந்த்தால்,
சிலர் பாவப்படுவார்கள்..
சிலர் கோபப்படுவார்கள்..
இதில் கோபப்பட ஒன்றுமில்லை
வாழ்வதற்கான ஆயிரம் வழிகளிள்
அழகை விற்பதும் ஒன்றென மொழிக..

கருத்துகள் இல்லை: