14 பிப்ரவரி 2014

தோழியின் அழகு குறித்துக் கேட்ப்பவர்களுக்கு

எனக்கொரு தோழி இருக்கிறாள்
கண்களின் கவர்ச்சி அறியேன்...
வெண்பல் தெரிய சிரிப்பாள்...
நிறம் கருப்பு...
கொஞ்சம் குட்டை...
கூந்தல் போதுமானளவு இருக்கிறது...
சாதாரண உடலமைப்பு...
உதடு....
பெயர் பாட்டி காலத்தது..
மொத்ததில் அவள் அழகை-
லட்ச்சணமா? அவலட்ச்சணமா? -என
உங்கள் பார்வையில்
என்னால் அருதியிட முடியாது.
இருப்பினும்
என்னை உரிமையோடு பார்த்துக்கொள்ளும்
அவளது அன்பில்
உங்கள் எதிர்பார்ப்பினும் மேலான
அழகு இருக்கிறது.
எங்கள் தோழமையை பற்றிக் கூற
நிறைய இருக்கிறது-
ஆயினும்
தோழியின் அழகு குறித்துதான்
கேட்டுத் தொலைக்கிறிர்கள்?


கருத்துகள் இல்லை: