ரகசியங்கள் எதுவுமில்லை…
வெட்கம் தொலைந்துப்போனது…
பாலீர்ப்பு மறந்துப்போனது…
ஆயினும்
கல்லுக்குள் தேரைப்
போல்
நட்புக்குள் காமம்
ஒளிந்திருக்கிறது.
”ஒரு நண்பன்!
ஒரு நண்பி!
இருவரும் இரு கண்கள்”-என்பாய்.
இருந்தும்
வெற்றிபெற்றுத்
திரும்புகையில்
எனக்கு கை குலுக்களையும்
அவளுக்கு முத்தங்களையும்
பரிசாக்கி பாராட்டுகிறாய்…
கலங்கமில்லா நட்பு
எனில்
காமமில்லா முத்தம்
எங்கே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக