25 பிப்ரவரி 2014

அழகான மானம் விற்றுவிடும்

நான் வறுமையில் இருந்தபோது
எனது தோழியும் வறுமையில் இருந்தாள்
ஒரு கட்டத்தில்
இருவரும் இளமையை விற்கத் திட்டமிட்டோம்…
லட்ச்சணமாய் இருந்ததால்
அவள் லட்ச்சங்களைப் பார்த்தாள்
அதுவும் எனக்கு வாய்க்கவில்லை-
நானோ அவலட்ச்சணம்…
எனக்கு மானம் முக்கியமல்ல
பணம்தான் முக்கியம்.- ஆயினும்
இங்கு மானத்தில்கூட
அழகான மானத்தைதான் வங்குகிறார்கள்.
இனி
நானும் என் வறுமையும்
என்ன செய்வொம்?

23 பிப்ரவரி 2014

19 பிப்ரவரி 2014

முத்தங்களைச் சேமிப்பவள்

பஞ்சு மிட்டாய்க்கு அடம்பிடிக்கும்
பிஞ்சிக் குழந்தையைப் போல்
கெஞ்சி கேட்டதனால்-
கொஞ்சும் வார்த்தைகளையும்
கொஞ்சம் முத்தங்களையும்
அவ்வப்போது அனுப்பிவைத்தேன்.
சேமிப்பு பழக்கமுள்ள அவள்
அவைகளை
இன்பாக்ஸ்லயே வைத்திருக்கிறாள்...

14 பிப்ரவரி 2014

கவனச்சிதறல்

நீ
பேருந்தின் முன் இருக்கையில்
அமர்ந்திருக்கிறாய் -
எப்போது வேண்டுமானாலும்
விபத்து நடக்கலாம்!

நிலவின் பாலினம் குறித்து

பாட்டி சுட்ட தோசை!
பாதி பிய்த்த அப்பம்!
மேகம் புகுந்து செல்லும் வாகனம்!
என்று நகையாடுங்கள்..
பதினைந்து நாள் சம்பாதித்ததை
பதினைந்து நாளில் செலவிடும் வீணன்!
இரவுச் சூரியன்!
என்று தத்துவம் பேசுங்கள்...
நீல ஆடைக்குள் உடல் மறைக்கும் பெண்!
ஒளிரும் பொன் கிண்ணம்!
காதலியின் வட்ட முகம்!
என்று கவிதை எழுதுங்கள்..
தேய்கிறது!
வளர்கிறது!
அம்மாவாசையன்று தொலைந்துபோகிறது!
என்று கதைக்கட்டுங்கள்..
இன்னும்-
வானில் இடம் சுட்டி
குழந்தைக்கு சோறூட்டுங்கள்..
பால் குழப்பம் மட்டும் செய்யாதீர்.-
நிலா எனப்படுவது போதாதெனில்
மதி என்றோ
காந்திமதி என்றோ
சந்திரா என்றோ
சந்திரலேகா என்றோ
பெயர் மாற்றுங்கள்...
சந்திரன் என வேண்டாம்.


தோழியின் அழகு குறித்துக் கேட்ப்பவர்களுக்கு

எனக்கொரு தோழி இருக்கிறாள்
கண்களின் கவர்ச்சி அறியேன்...
வெண்பல் தெரிய சிரிப்பாள்...
நிறம் கருப்பு...
கொஞ்சம் குட்டை...
கூந்தல் போதுமானளவு இருக்கிறது...
சாதாரண உடலமைப்பு...
உதடு....
பெயர் பாட்டி காலத்தது..
மொத்ததில் அவள் அழகை-
லட்ச்சணமா? அவலட்ச்சணமா? -என
உங்கள் பார்வையில்
என்னால் அருதியிட முடியாது.
இருப்பினும்
என்னை உரிமையோடு பார்த்துக்கொள்ளும்
அவளது அன்பில்
உங்கள் எதிர்பார்ப்பினும் மேலான
அழகு இருக்கிறது.
எங்கள் தோழமையை பற்றிக் கூற
நிறைய இருக்கிறது-
ஆயினும்
தோழியின் அழகு குறித்துதான்
கேட்டுத் தொலைக்கிறிர்கள்?


09 பிப்ரவரி 2014

மணமுடையாய்...

என் சட்டையோடு ஒட்டிவரும்
உன் சுடிதாரின் வாசம் பற்றி
என் தோட்டத்துப் பூக்கள்
பெருமையாகப் பேசிக்கொள்கின்றன.

08 பிப்ரவரி 2014

சங்கக் கவிதை

காக்கையின் நிறம் கருப்பு
கிளியின் நிறம் பச்சை
கொக்கின் நிறம் வெள்ளை
என்னவளின் நிறம் சிவப்பு!

                (சிறுபிள்ளைதனமாக யோசிப்போர் சங்கம்)

காதலைச் சொல்லிவிடு

காலம் வருமெனக் காத்திருந்து
கை நழுவிப்போனக் காதல்
கதைப்பதற்க்கு இனிக்கும்..
வாழ்வதற்க்கு வலிக்கும்..
ஆதலால்
காதலை மட்டும் சொல்லாமல் விடாதே-
அது நம்மைக் கொல்லாமல் விடாது.
ஈவ்டீசிங்கில் சிறை சென்றாலும் பரவாயில்லை
செருப்பால் அடி வாங்கினாலும் பரவாயில்லை
காதலை மட்டும் கராராக சொல்லிவிடு.-
கனிந்தால் கையில் எடு!
கசந்தால் தள்ளி விடு!


விருப்பும் வெறுப்பும்

என் கடைசி மூச்சிக்கூட
உன் பெயரை சொல்லக்கூடாது-
என்பதற்ககதான்
நான் இன்னமும் சாகாமல் இருக்கிறேன்.


பரிசளித்தல்

உன் நினைவாக
எதுவும் வேண்டாம்
உன் நினைவைத் தவிர..


சொல்லாதக் காதல்

மரம் பட்டுப்போன பின்
மழைக் கொட்டி போவதைப் போல்
காலம் கடந்து
காதலை பேசுகிறோம்.-
நான் இன்னொருவள் கணவனாக!
நீ இன்னொருவன் மனைவியாக!


சொர்க்கநரகம்

திருமணம்;
சிலருக்கு வாழ்க்கையைத் தொடங்கிவைக்கிறது..
பலருக்கு வாழ்க்கையை முடித்துவைக்கிறது..


வெற்றியின் ரகசியம்

காதலின் முழுமையான வெற்றி
அதன் தோல்வியில்தான் இருக்கிறது.

காதல் பிச்சை

பேருந்து நிறுத்தத்தில்
பிச்சைக் கேட்டு நச்சரிக்கும்
சிறுவனைப் போல்
உன்னையே தொடர்ந்து வருகிறேன்
ஒருமுறையேனும் பார்..
ஏனெனில்
நீ இடாமல்
என் பாத்திரம் நிரம்பாது.


கவிதையினும் சிறந்தவள்

கவிதை எழுதுவது-
சிறப்பல்ல...
கவிதையில் எழுதப்படுவதால்
நீதான் சிறப்பானவள்!

02 பிப்ரவரி 2014

அழகை விற்பவள்

கோடை மழை!
இன்றலர்ந்த மலர்!
புதுப்படத்தின் முதல் காட்சி!
விழாக்காலப் புத்தாடை!
என்பனப் போல்
இவளின் அழகு நுகர ஈர்ப்பது...
இளமையைச் செலவிட்டு
வறுமையைச் சரிகட்ட
முடியாத செயலில்
அடியெடுத்து வைத்தாள்-
விடியாதா என்று.
பலரும் வந்து அணைப்பதால்
ஒரு நாள் அணைந்துவிடும்
எரியும் வரைதானே சுடரின் அழகு
பின்
வாழ்வாதாரமான அழகை
அழகு நிலையத்தாளும் மீட்ட முடியாது.
வந்தவர் இச்சை என்பர்
வராதார் கொச்சை என்பர்
புதைந்த ரகசியம் அறிந்த்தால்,
சிலர் பாவப்படுவார்கள்..
சிலர் கோபப்படுவார்கள்..
இதில் கோபப்பட ஒன்றுமில்லை
வாழ்வதற்கான ஆயிரம் வழிகளிள்
அழகை விற்பதும் ஒன்றென மொழிக..

அம்மா குறித்துப் பேசமுடியாதவன்

கண்கண்ட தெய்வம்!
அன்பின் மறுபெயர்!
-என்பனப் போன்று
சொலவடை தொடங்கி
குறுஞ்செய்தி வரை
அம்மாக்களின் புகழாரம் கேட்டு
சலித்துவிட்டது எனக்கு.
சிசு கொன்ற அம்மாக்களும்
அனாதைகளை உருவாக்கிய அம்மாக்களும்
ஓடிப்போன அம்மாக்களும்
இங்கு ஏராளம் உண்டு.
அம்மா இருப்பவனும்
அம்மா இல்லாதவனும்
அம்மாவின் பெருமைகளைப் பேசுகிறான்...
அம்மா இருந்தும் இல்லாதவன்
அம்மாவின் சிறுமைகளையும் பேசுவதில்லை...

I Read...

"Reading Book"
Is my daily habit-
It is Facebook.

Love < Friendship


சங்கக் கவிதை

கவிதை எழுதுவதைவிட
கல் உடைப்பது எளிது...
                     
                        (நான்கு வரியில் கவிதை எழுத-
                         பதினாறு நாட்கள் யோசிப்போர் சங்கம்)


பின்தொடரும் ஒற்றை நினைவு

நோக்கமின்றி நோக்கி களிப்பதால்
அன்றலர்ந்து அன்றழியும் மலரினைப் போல்
மங்கையர் நினைவுகளும் வாடிவிடும்-
உன் நினைவுகள் மட்டுமே
வாட மறுத்து வாட்டி வதைக்கிறது..

விஸ்வரூபம்

புள்ளி வைத்தால்
கோலமாய் நீண்டுவிடுகிறது-
பொய்…


பால் பிரிவிணை

ரகசியங்கள் எதுவுமில்லை…
வெட்கம் தொலைந்துப்போனது…
பாலீர்ப்பு மறந்துப்போனது…
ஆயினும்
கல்லுக்குள் தேரைப் போல்
நட்புக்குள் காமம் ஒளிந்திருக்கிறது.
”ஒரு நண்பன்!
ஒரு நண்பி!
இருவரும் இரு கண்கள்”-என்பாய்.
இருந்தும்
வெற்றிபெற்றுத் திரும்புகையில்
எனக்கு கை குலுக்களையும்
அவளுக்கு முத்தங்களையும்
பரிசாக்கி பாராட்டுகிறாய்…
கலங்கமில்லா நட்பு எனில்
காமமில்லா முத்தம் எங்கே?