17 செப்டம்பர் 2018

துருபிடித்தக் காதல்


மைப்பூசியப் புருவங்கள்
வில்லென எடுத்து வைத்தாய்
அமிலம்தடவிய கண்கள்
அம்பேன தொடுத்து வைத்தாய்
நீ எய்த வேண்டாம்
நான் வீழ்ந்துவிட்டேன்...

உன் விழியிலிருந்து
ஒரு நொடியில்
ஒரு கோடி தோட்டாக்கள் புரப்பட்டு
ஒருமுக வெறியோடு
என் ஒரே இதயத்தை வீழ்த்தின.
உள்ளுக்குள் கரிமருந்தை விடுத்தாய்
உயிரை உருத்தாமல் எடுத்தாய்...

டைரி எழுதுவது
புகை வளிப்பது
தேனீர் அருந்துவது
- என்பனப் போல்
எனக்குமொரு வழக்கம்தான்
உன்னைப் பார்த்தல்.
பிகரை பார்த்து கியரைப் போடும்
ட்ரைவரைப் போல்
எனக்குள் ஒரு உத்வேகம் பிறக்குமே
அதற்க்காகவேணும்
உன்னை தினமும் பார்த்தாக வேண்டும்...

ஒரே கூண்டில் இரண்டு கிளிகளையும்
ஒரே தொட்டியில் இரண்டு செடிகளையும்
வளர்ப்பது போல் அத்தனை சுலபமல்ல.
உன்னை வளர்க்கும் இதயத்தில்
இன்னொருவளுக்கு இடமளிப்பது... 

நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்பட்டு
நீண்டகாலமாய் மீட்க்கப்படாமல் கிடக்கும்
வாகனத்தைப் போல்
உன்னிடம் மாட்டிய என் இதயமும்
துருப்பிடித்துக் கிடக்கிறது.
அதை மீட்டுவிடவும் ஆசைதான்
மீட்டாமல் விடவும் ஆசைதான்... 



பத்தில் பதினொன்று


முதல் வகுப்பு முதல் காதல்
அரவணைத்துப் பேசிய நண்பனின் அக்கா
இன்னமும் முடியாத கோடை விடுமுறை
கொஞ்சும் நயனம் கலையாத மவுனம்
மருமகளின் பெயராகி எப்போதும் ஒலிப்பவள் 
நிலவின் பாலினம் குறித்தக் கவிதை
நீலப் பூப்போட்ட வெள்ளைத் துப்பட்டா
விதிவழி படினும் வாழ்வின் ஒளி
சீக்கிரம் வளர்ந்த மடோனா செபாஸ்டின்
அகம்புறம் யாவும் எனது சாயல்
சபிக்கப்பட்ட வாழ்க்கை நீண்ட பயணம்
01199106 - பாத்திமா டீச்சர்
02199409 - மகராசி
03199712 - பிரேமா
04199914 - பதர்நிஷா
05200116 - திவ்யா
06200419 - சந்திரலேகா
07200722 - மெர்ஸி
08200924 - கனகா
09201227 - வினி
10201328 - நிவிதா
11201429 - செ.மு.பாப்பா



நான்முகன்


முகம்-1
நடைமுறைக்கு பழக்கப்பட்டவன்
அன்றைய பொழுதுகளை வாழ்பவன்
வெகுளிக்கு விளக்கம் தெரியாதவன்
உணவின் சுவை அறியாதவன்
எல்லோரையும் நம்புகிறான்
நாத்திகம் பேசினாலும் பிரசாதம் திண்கிறான்
அன்பை சமமாக்கி வைத்திருக்கிறான்
விடுப்பின்றி பணி செய்கிறான்
கணக்கு பார்க்கிறான்
எதிர்காலம் குறித்து கனவு காண்கிறான்
வறுமையில் வராக்கடனை யோசிக்கிறான்
இரவில் மின்விசிறிக்காக இரக்கப்படுகிறான்
நண்பர்களுகு ரீசார்ஜ் செய்கிறான்
தோழிகளின் ‘ஹி’க்கு நாலாம்நாள் பதிலிடுகிறான்
குடும்ப பாரத்தை விரும்பியே சுமக்கிறான்
எதிர் வீட்டுக்காரனிடம் சின்நகையில் பேசுகிறான்
புதிய நண்பர்களை மொபைலில் சேவ் செய்கிறான்
ஜனநாயகத்தை நொந்துகொள்கிறான்
தங்கை ரிமோட்டிட டிவி பார்க்கிறான்
முன்னால் காதலிகளின் நலன் விரும்புகிறான்
ஒதுங்கிப் போகிறான்
ஒரு கப் தேநீர் அருந்துகிறான்
அவ்வளவே இயல்முகன்…..
இன்றும் உங்களை கடந்து சென்றவனவன்

முகம்-2
அன்பைப் பொழிகிறான்
அக்கா மகள்களை நலம் விசாரிக்கிறான்
முதலாளியாக விரும்புகிறான்
ஆடம்பர செலவு செய்கிறான்
சண்டைகாரன் மகளுக்கு சாக்லெட் தருகிறான்
இலக்கியம் பேசி இரவுகளைத் தொலைக்கிறான்
தோழிகளில் ஒருத்தியை மணக்க விரும்புகிறான்
நண்பர்களோடு நீள பேசிக்கொண்டிருக்கிறான்
நக்சலின் மார்க்ஸிய நியாயங்களை இயம்புகிறான்
அண்ணனுக்கு வாட்ஸ்அப் செய்கிறான்
அநியாயத்துக்கு குரல் கொடுக்கிறான்
நியூஸ் பார்கிறான்
அம்மாவுக்காக பாத்திரம் விளக்குகிறான்
பிச்சை இடுகிறான்
இவன் கால்முகன்….

முகம்-3
எல்லோரையும் வெறுக்கிறான்
இயேசுவை சண்டைக்கு இழுக்கிறான்
பெட்டிக்கடையில் கடன் கேட்கிறான்
கோபப்படுகிறான்
உணவின் சுவை குறித்து கலகம் செய்கிறான்
தன் கொட்டம் அடிக்கிறான்
சிக்னலை மீறுகிறான்
இளையராஜா பாடலில் லயித்துப் போகிறான்
நண்பனின் தங்கைக்கு நூறு எஸ்எம்எஸ் அனுப்புகிறான்
முகேஷை பார்த்துக்கொண்டே புகைக்கிறான்
சமயத்தில் வெட்கபடுகிறான்
இவன் அரைமுகன்….

முகம்-4
உலகை மறந்துவிடுகிறான்
மனைவியை அடிக்கிறான்
எதையேனும் உடைக்கிறான்
வாந்தி எடுக்கிறான்
பஸ் ஸ்டாண்டில் தூங்குகிறான்
தங்கையின் நடத்தையில் சந்தேகம் கொள்கிறான்
கோத்தா, கொம்மா, ஜட்டி, பாடி எனத் திட்டுகிறான்
அப்பாவின் இயலாமையை குத்திக்காண்பிக்கிறான்
அத்தையை மச்சினியை முத்தமிட துடிக்கிறான்
ஆட்டோவில் வருகிறான்
இவன் முக்கால்முகன்….

முகம்- 0
யோகநிலையில் இருக்கிறான்
புத்தனாக விரும்புகிறான்
கனவில் நயன்தாராவை புணருகிறான்
கிடைமட்டம் ஆகிறான்
இவன் முழுமுகன்….





10 மார்ச் 2018

முன்னால் காதலிகளுக்கு சமர்ப்பனம்


என் ஆசிரியரின் பாராட்டைப் பெற்றதொன்று
பரிசில் பெற்றதொன்று
நண்பனின் காதலுக்கு தூதானதொன்று
விழா மேடையை தன்வயபடுத்தியதொன்று
திருமண பிளக்ஸ் ஏறியதொன்று
வாழ்த்து மடலானதொன்று
இரங்கற் பாவானதொன்று
புரட்சி பேசியதொன்று
கம்யூனிச சுவரொட்டியானதொன்று
மெட்டுகட்டி பாடல் பெற்றதொன்று
தங்கையின் வாரஇதழில் பிரசுராமானதொன்று
ஊடல் தனித்ததொன்று
பொரிகடலை அச்சுவெல்லத்திற்கு மாற்றானதொன்று
பொன்மொழியாய் நிலைப்பெற்றதொன்று
காதலியை பெற்றுத்தந்ததொன்று
பின் அவள் தோழியையும் வசப்படுத்தியதொன்று
பெண்ணுடலைப் பெற்றுத்தந்ததொன்று
இரவுகளைத் தின்றதொன்று
4151 லைக்குகளைப் பெற்றதொன்று
ஒன்று தற்குறிப்பேற்ற அணிக்கு உவமையாயிற்று
மற்றொன்று பெருங்கவியின் கவிதையில் இரு வரிகளாயிற்று
இருந்தும் என் ஏக பத்தினியிடம்
ஒவ்வொரு அடிக்கும் அடிவாங்கித் தந்த கவிதைகளை
முன்னால் காதலிகளுக்கு சமர்ப்பிக்க இயலாமல் போயிற்று



விட்டு விடுதலையாகி


மாறி மாறி விடுதலின்றி
என் சங்கை இறுக பற்றியிருக்கும்
இந்த நாண் கையை
இந்த பொன் கையை
அவ்வப்போது
அலைமாறியில் கழட்டிவைக்கக்கூட
அனுமதியில்லை
நானோ சந்தோஷக் கூச்சலில்
வானோக்கி கழட்டியெரிய விரும்புகிறேன்
அங்ஙனம் செய்ய
ஒன்று நான் சாகவேண்டுமாம்
அன்று நீ சாக வேண்டுமாம்
ஏழெட்டு நாட்கள் கழட்டாமல் போட்ட
ஜட்டியின் அரிப்பை போல்
ஒவ்வொரு நாளும்
நான்படும் அலுங்கழிப்பை
உனக்கு எப்படி புரியவைப்பேன்
நீ செத்து போ என் கணவா !

07 மார்ச் 2018

தசம பாக ஏமாளிகள்

ஏழைகளின் அடிப்படை வளர்ச்சியில்
எனது பங்களிப்பென
இருமாப்பில் பூரிக்கிறார் பின்னவர்…
அதற்கு சாட்சியென
கெத்சமெனே தோட்ட பின்புலத்தில்
காலண்டரில் குடும்பத்துடன் சிரிக்கிறார் முன்னவர்...

இயேசுவால் இரட்ச்சிக்கப்பட்டவர்கள்
இருவர்;
ஒருவர் ஏமாற்றுபவர்…
மற்றவர் ஏமாறுபவர்…
முன்னவர் உண்டியலேந்துகிறார்..
பின்னவர் உண்டியலிடுகிறார்..







04 மார்ச் 2018

ஒற்றை வாழ்வு


சிலை வடித்தவனுக்கு தெய்வம் அருள் பாலிப்பதில்லை
உலை வைத்தவனுக்கு அன்னம் மிச்சம் இருப்பதில்லை
அவனது தெய்வம் மலையில் ஏறிவிட்டது
அவனது அன்னம் குப்பையில் கொட்டிவிட்டது
நிவ சரணமானவன் சவ சரணமாகினும்
நிவ நிவ சரணம்தான் நிவ நிவ சரணம்தான்

மகே இல்லனா சுகே நவினம்
பின் மனே வினே பின்நவினம்
நயன்தாரா சாயல் அவளுக்கு
அவளைக் காதலிக்கும் நூறுவரில்
அவளை மட்டுமே புணர எத்தனிக்கும்
ஒருவனின்
மூன்று வார்த்தைகளை
அன்றன்றைய முத்தங்களை
ஒன்றுவிட்ட காமத்தை
அன்புடன் கூடிய வாழ்வை
மீள மீள எடுத்து செல்கிறாள்
மேலும் மேலும் மிடுக்கேற்றி கொல்கிறாள்

ஆனால் அவன் கீழ்க்கண்ட
குடும்ப குத்துவிளக்குடன் வாழ பழிக்கப்பட்டவன்
அன்பு மிகவுடையாள்
அச்சம் மடம் நாணம் பயிற்பு உடையாள்
மரபைப் பேனுபவள்
வகைவகையாய் பரிமாறுபவள்
ஆசைகளை அடக்கத் தெரிந்தவள்

காதல் விடுத்தோ காமம் விடுத்தோ
இரண்டும் விடுத்தோ
முடிச்சில் வாழ்வார் வாழ்வார்
உறவில் வாழ்வார் வாழ்வார்
பொருளில் வாழ்வார் வாழ்வார்
மகவில் வாழ்வார் வாழ்வார்
பண்பாட்டில் வாழ்வார் வாழ்வார்

ஆசைகளற்று வாழ்வாரும் உளர்
கடமைக்கேற்று வாழ்வாரும் உளர்
”ஐ லவ் யூ” இங்கு வேறு வாயற்றவை
முத்தங்கள் அவ்வளவு அருவறுப்பானவை
தொடுகை மிகவும் எரிச்சலூட்டுபவை
புணரும் நோக்கு கொலைவெறி தூண்டுபவை

நயன்தாரா நினைவினிலே
பயன்தராமல் வாழும் இவனை
இச்சமூகம் என்ன செய்துவிடும்
இச்சட்டம் என்ன செய்துவிடும்