10 மார்ச் 2018

முன்னால் காதலிகளுக்கு சமர்ப்பனம்


என் ஆசிரியரின் பாராட்டைப் பெற்றதொன்று
பரிசில் பெற்றதொன்று
நண்பனின் காதலுக்கு தூதானதொன்று
விழா மேடையை தன்வயபடுத்தியதொன்று
திருமண பிளக்ஸ் ஏறியதொன்று
வாழ்த்து மடலானதொன்று
இரங்கற் பாவானதொன்று
புரட்சி பேசியதொன்று
கம்யூனிச சுவரொட்டியானதொன்று
மெட்டுகட்டி பாடல் பெற்றதொன்று
தங்கையின் வாரஇதழில் பிரசுராமானதொன்று
ஊடல் தனித்ததொன்று
பொரிகடலை அச்சுவெல்லத்திற்கு மாற்றானதொன்று
பொன்மொழியாய் நிலைப்பெற்றதொன்று
காதலியை பெற்றுத்தந்ததொன்று
பின் அவள் தோழியையும் வசப்படுத்தியதொன்று
பெண்ணுடலைப் பெற்றுத்தந்ததொன்று
இரவுகளைத் தின்றதொன்று
4151 லைக்குகளைப் பெற்றதொன்று
ஒன்று தற்குறிப்பேற்ற அணிக்கு உவமையாயிற்று
மற்றொன்று பெருங்கவியின் கவிதையில் இரு வரிகளாயிற்று
இருந்தும் என் ஏக பத்தினியிடம்
ஒவ்வொரு அடிக்கும் அடிவாங்கித் தந்த கவிதைகளை
முன்னால் காதலிகளுக்கு சமர்ப்பிக்க இயலாமல் போயிற்று



கருத்துகள் இல்லை: