சிலை
வடித்தவனுக்கு தெய்வம் அருள் பாலிப்பதில்லை
உலை
வைத்தவனுக்கு அன்னம் மிச்சம் இருப்பதில்லை
அவனது
தெய்வம் மலையில் ஏறிவிட்டது
அவனது
அன்னம் குப்பையில் கொட்டிவிட்டது
நிவ
சரணமானவன் சவ சரணமாகினும்
நிவ
நிவ சரணம்தான் நிவ நிவ சரணம்தான்
மகே
இல்லனா சுகே நவினம்
பின்
மனே வினே பின்நவினம்
நயன்தாரா
சாயல் அவளுக்கு
அவளைக்
காதலிக்கும் நூறுவரில்
அவளை
மட்டுமே புணர எத்தனிக்கும்
ஒருவனின்
மூன்று
வார்த்தைகளை
அன்றன்றைய
முத்தங்களை
ஒன்றுவிட்ட
காமத்தை
அன்புடன்
கூடிய வாழ்வை
மீள
மீள எடுத்து செல்கிறாள்
மேலும்
மேலும் மிடுக்கேற்றி கொல்கிறாள்
ஆனால்
அவன் கீழ்க்கண்ட
குடும்ப
குத்துவிளக்குடன் வாழ பழிக்கப்பட்டவன்
அன்பு
மிகவுடையாள்
அச்சம்
மடம் நாணம் பயிற்பு உடையாள்
மரபைப்
பேனுபவள்
வகைவகையாய்
பரிமாறுபவள்
ஆசைகளை
அடக்கத் தெரிந்தவள்
காதல்
விடுத்தோ காமம் விடுத்தோ
இரண்டும்
விடுத்தோ
முடிச்சில்
வாழ்வார் வாழ்வார்
உறவில்
வாழ்வார் வாழ்வார்
பொருளில்
வாழ்வார் வாழ்வார்
மகவில் வாழ்வார் வாழ்வார்
பண்பாட்டில்
வாழ்வார் வாழ்வார்
ஆசைகளற்று
வாழ்வாரும் உளர்
கடமைக்கேற்று
வாழ்வாரும் உளர்
”ஐ
லவ் யூ” இங்கு வேறு வாயற்றவை
முத்தங்கள்
அவ்வளவு அருவறுப்பானவை
தொடுகை
மிகவும் எரிச்சலூட்டுபவை
புணரும்
நோக்கு கொலைவெறி தூண்டுபவை
நயன்தாரா
நினைவினிலே
பயன்தராமல்
வாழும் இவனை
இச்சமூகம்
என்ன செய்துவிடும்
இச்சட்டம்
என்ன செய்துவிடும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக