கன்னித் தீவிலிருந்து வெளியேறி
வென்று / தோற்று
விரும்பி / வெறுத்து
ஏழு கடல்
எழு மலை
எழேழு தேவதைகள்
நட்பு / பகை
துரோகம் / நம்பிக்கை
அன்பு / வன்மம்
துன்பம் / மகிழ்ச்சி
என
எல்லாம் கடந்துவிட்டாலும்
வாழ்நாள் முடிந்துவிட்டாலும்
இந்த மனது
யாரோ ஒருவரிடம்தான்
முற்றுமுதலாய் இருந்துவிடுகிறது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக