10 மார்ச் 2018

விட்டு விடுதலையாகி


மாறி மாறி விடுதலின்றி
என் சங்கை இறுக பற்றியிருக்கும்
இந்த நாண் கையை
இந்த பொன் கையை
அவ்வப்போது
அலைமாறியில் கழட்டிவைக்கக்கூட
அனுமதியில்லை
நானோ சந்தோஷக் கூச்சலில்
வானோக்கி கழட்டியெரிய விரும்புகிறேன்
அங்ஙனம் செய்ய
ஒன்று நான் சாகவேண்டுமாம்
அன்று நீ சாக வேண்டுமாம்
ஏழெட்டு நாட்கள் கழட்டாமல் போட்ட
ஜட்டியின் அரிப்பை போல்
ஒவ்வொரு நாளும்
நான்படும் அலுங்கழிப்பை
உனக்கு எப்படி புரியவைப்பேன்
நீ செத்து போ என் கணவா !

கருத்துகள் இல்லை: