மைப்பூசியப் புருவங்கள்
வில்லென எடுத்து
வைத்தாய்
அமிலம்தடவிய கண்கள்
அம்பேன தொடுத்து
வைத்தாய்
நீ எய்த வேண்டாம்
நான் வீழ்ந்துவிட்டேன்...
உன் விழியிலிருந்து
ஒரு நொடியில்
ஒரு கோடி தோட்டாக்கள்
புரப்பட்டு
ஒருமுக வெறியோடு
என் ஒரே இதயத்தை
வீழ்த்தின.
உள்ளுக்குள் கரிமருந்தை
விடுத்தாய்
உயிரை உருத்தாமல்
எடுத்தாய்...
டைரி எழுதுவது
புகை வளிப்பது
தேனீர் அருந்துவது
- என்பனப் போல்
எனக்குமொரு வழக்கம்தான்
உன்னைப் பார்த்தல்.
பிகரை பார்த்து
கியரைப் போடும்
ட்ரைவரைப் போல்
எனக்குள் ஒரு உத்வேகம்
பிறக்குமே
அதற்க்காகவேணும்
உன்னை தினமும்
பார்த்தாக வேண்டும்...
ஒரே கூண்டில் இரண்டு
கிளிகளையும்
ஒரே தொட்டியில்
இரண்டு செடிகளையும்
வளர்ப்பது போல்
அத்தனை சுலபமல்ல.
உன்னை வளர்க்கும்
இதயத்தில்
இன்னொருவளுக்கு
இடமளிப்பது...
நீதிமன்றத்தால்
ஜப்தி செய்யப்பட்டு
நீண்டகாலமாய் மீட்க்கப்படாமல்
கிடக்கும்
வாகனத்தைப் போல்
உன்னிடம் மாட்டிய
என் இதயமும்
துருப்பிடித்துக்
கிடக்கிறது.
அதை மீட்டுவிடவும்
ஆசைதான்
மீட்டாமல் விடவும்
ஆசைதான்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக