30 டிசம்பர் 2013

எனது வேலை; காதலிப்பது.

"என்னவளின்
அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
நேரில் வந்து பார்த்துவிட்டுப் போங்கள்
அவளின் முகவரி;
    அழகுத்தெரு,
    அழகூர்,
    அழகு மாவட்டம்.
அவளை ஒருமுறைப் பார்த்துவிட்டால்
இப்பிறவியின் பயனை அடைந்துவிடுவீர்கள்."-
இப்படியாக நான் அவள்  குறித்து
பிதற்றிக்கொண்டும்
புலம்பிக்கொண்டும்
லூசாகத் திரிகிறேன்...
அவளோ 'வேலைவெட்டி இல்லாதவன்'- என்று
என்னை காதலிக்க மறுத்துவிட்டாள்...
அவளுக்கு எப்படி புரிய வைப்பது
என் முழுநேர வேலையே
அவளைக் காதலிப்பதுதான் என்று?


25 டிசம்பர் 2013

இயேசுவின் இரத்தம் ஜெயம்

"கர்த்தரின் வருகை சமிபமாய் இருக்கிறது"-
என்பது வெறும் வார்த்தையாகதான் இருக்கிறது.
கர்த்தாவே விரைவில் வாரும்
உம்மை மீண்டும் சிலுவையில் அறைந்து
இரத்தம் சிந்த வைக்க காத்திருக்கிறோம்...

உன்னுடைய இரத்தமும்
என்னுடைய இரத்தமும்
"A" , "B" அல்லது "O " பாசிடிவாக இருக்கலாம்
ஆனால்
இயேசுவின் இரத்தம்
பாவத்தைக் கழுவுற பாசிடிவ்...
உலகில் பாவங்கள் பெருகிவிட்டனவே
ஆதலால் அனைத்து பாவங்களையும்
அவரின்   இரத்தத்தால் கழுவிக்கொள்வோம்..





23 டிசம்பர் 2013

தற்குறிப்பேற்றம்

நீ கடலாடி கரையேறுகிறாய்
பள்ளத்தைப் பார்த்துப் போகும் வெள்ளம்
உன்னிடம் உள்ளதைப் பார்த்துவிட்டு
உன்னுடன் வந்துவிடவேண்டி
கரையை உடைக்கத் தொடங்குகிறது
இனி அலைகள் ஓயாது.

மொழியின்றி வாசித்தல்

இதழ்கள் வாசிக்கும் பழக்கமுள்ள எனக்கு
வார இதழ்
மாத இதழ்
காலாண்டு இதழ்
அரையாண்டு இதழ்
எல்லாம் வாசிக்க கிடைக்கின்றன
தினசரிகள் வாய்ப்பதில்லை..

21 டிசம்பர் 2013

18 டிசம்பர் 2013

கல்லூரிசாலை



தேவதைகள்-
கதைகளில் வருவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்
இப்போதுதான் வீதியில் உலவுவதைப் பார்க்கிறேன்...

    

03 மே 2013

அன்புள்ள அண்ணனுக்கு..


இன்று
என் வாழ்வில்
சுவைக் கூட்டியிருப்பது
அன்று
 உன் வியர்வையில்
கரித்த  உப்புதான்

28 மார்ச் 2013

இல்லாத காதலை நீட்டித்தல்

ஒரு பொய்யை மறைக்க
நிறைய பொய்ச்சொல்ல வேண்டியிருக்கிறது
முன்பு காதலிப்பதாக..
இப்போது கல்யாணம் முடிப்பதாக..

உலகைத் தொலைத்தவன்

நான்
உன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்
எனக்குப் பின்னாலிருந்த உலகம்
தொலைந்துவிட்டது.

முடி தானம்

எந்த மொட்டுக்களும்
மலர வேண்டாம்
என்னவள்
மொட்டை அடித்துவிட்டாள்

மணமாகிப் போன தங்கச்சி...

எங்கள் தோட்டத்து பூக்களில் ஒன்றைப்
பறித்துக் கொடுத்தோம்
பிரிதுக்கொண்டுப் போனான்
நுகர்வானோ?
சிதைப்பானோ?
இன்னொருவனுடனான தங்கையின் இரவுகள்...

காதல் மலர்

கல்யாணத்திற்கும்
கருமாதிக்கும்
கற்சிலை சாமிக்கும்
கல்லறைக்கும்
மாலையாகும் ரோஜாக்கள்-
இன்னும்
காதலுக்கும் ஆகித்தொலைகின்றன...

அதிர்ந்தடங்குதல்

நீ என்னை கடந்து செல்கிறாய்
கல்லெறிப்பட்டத் தகரத்தைப் போல்
அதிர்ந்துக் கொண்டே இருக்கிறது
என் துருப்பிடித்த இதயம்.

நண்பேன்டா...

கொடுப்பது நீ என்றால்
விசத்தையும் குடித்துவிடுவேன்..
எடுப்பது நீ என்றால்
மனைவியையும் கொடுத்துவிடுவேன்..

27 மார்ச் 2013

வீணாய் போன நேரம்

என் நாட்களில்
வீணாய் போன நேரம்
எது தெரியுமா?
அது
உன்னை நினைக்காத நேரம்தான்...

16 பிப்ரவரி 2013

கொஞ்சம் அருள் தா

தெய்வம் இல்லாத ஊரிலும்
நதி இல்லாத ஊரிலும்
குடி இருப்பது கடினமாம்...
நீ இல்லாத ஊரில்-
குடித்து இருப்பதும் கடினம்தான்.

அரசாங்க கிளி விரட்டி

சோளக்கொல்ல   காய் பிடித்தால்
தாளந்தட்டிக்  கிளி விரட்டணும் 
எனக்கந்த வேலை இல்லை 
வயல்வெளி  ஊடாக 
ரயில் வழி செல்வதானால்
நித்தமும் பத்து முறை
சத்தமிட்டு செல்கிறது
அரசாங்க கிளி விரட்டி
 
- மகேஷ் பொன்