10 மார்ச் 2018

முன்னால் காதலிகளுக்கு சமர்ப்பனம்


என் ஆசிரியரின் பாராட்டைப் பெற்றதொன்று
பரிசில் பெற்றதொன்று
நண்பனின் காதலுக்கு தூதானதொன்று
விழா மேடையை தன்வயபடுத்தியதொன்று
திருமண பிளக்ஸ் ஏறியதொன்று
வாழ்த்து மடலானதொன்று
இரங்கற் பாவானதொன்று
புரட்சி பேசியதொன்று
கம்யூனிச சுவரொட்டியானதொன்று
மெட்டுகட்டி பாடல் பெற்றதொன்று
தங்கையின் வாரஇதழில் பிரசுராமானதொன்று
ஊடல் தனித்ததொன்று
பொரிகடலை அச்சுவெல்லத்திற்கு மாற்றானதொன்று
பொன்மொழியாய் நிலைப்பெற்றதொன்று
காதலியை பெற்றுத்தந்ததொன்று
பின் அவள் தோழியையும் வசப்படுத்தியதொன்று
பெண்ணுடலைப் பெற்றுத்தந்ததொன்று
இரவுகளைத் தின்றதொன்று
4151 லைக்குகளைப் பெற்றதொன்று
ஒன்று தற்குறிப்பேற்ற அணிக்கு உவமையாயிற்று
மற்றொன்று பெருங்கவியின் கவிதையில் இரு வரிகளாயிற்று
இருந்தும் என் ஏக பத்தினியிடம்
ஒவ்வொரு அடிக்கும் அடிவாங்கித் தந்த கவிதைகளை
முன்னால் காதலிகளுக்கு சமர்ப்பிக்க இயலாமல் போயிற்று



விட்டு விடுதலையாகி


மாறி மாறி விடுதலின்றி
என் சங்கை இறுக பற்றியிருக்கும்
இந்த நாண் கையை
இந்த பொன் கையை
அவ்வப்போது
அலைமாறியில் கழட்டிவைக்கக்கூட
அனுமதியில்லை
நானோ சந்தோஷக் கூச்சலில்
வானோக்கி கழட்டியெரிய விரும்புகிறேன்
அங்ஙனம் செய்ய
ஒன்று நான் சாகவேண்டுமாம்
அன்று நீ சாக வேண்டுமாம்
ஏழெட்டு நாட்கள் கழட்டாமல் போட்ட
ஜட்டியின் அரிப்பை போல்
ஒவ்வொரு நாளும்
நான்படும் அலுங்கழிப்பை
உனக்கு எப்படி புரியவைப்பேன்
நீ செத்து போ என் கணவா !

07 மார்ச் 2018

தசம பாக ஏமாளிகள்

ஏழைகளின் அடிப்படை வளர்ச்சியில்
எனது பங்களிப்பென
இருமாப்பில் பூரிக்கிறார் பின்னவர்…
அதற்கு சாட்சியென
கெத்சமெனே தோட்ட பின்புலத்தில்
காலண்டரில் குடும்பத்துடன் சிரிக்கிறார் முன்னவர்...

இயேசுவால் இரட்ச்சிக்கப்பட்டவர்கள்
இருவர்;
ஒருவர் ஏமாற்றுபவர்…
மற்றவர் ஏமாறுபவர்…
முன்னவர் உண்டியலேந்துகிறார்..
பின்னவர் உண்டியலிடுகிறார்..







04 மார்ச் 2018

ஒற்றை வாழ்வு


சிலை வடித்தவனுக்கு தெய்வம் அருள் பாலிப்பதில்லை
உலை வைத்தவனுக்கு அன்னம் மிச்சம் இருப்பதில்லை
அவனது தெய்வம் மலையில் ஏறிவிட்டது
அவனது அன்னம் குப்பையில் கொட்டிவிட்டது
நிவ சரணமானவன் சவ சரணமாகினும்
நிவ நிவ சரணம்தான் நிவ நிவ சரணம்தான்

மகே இல்லனா சுகே நவினம்
பின் மனே வினே பின்நவினம்
நயன்தாரா சாயல் அவளுக்கு
அவளைக் காதலிக்கும் நூறுவரில்
அவளை மட்டுமே புணர எத்தனிக்கும்
ஒருவனின்
மூன்று வார்த்தைகளை
அன்றன்றைய முத்தங்களை
ஒன்றுவிட்ட காமத்தை
அன்புடன் கூடிய வாழ்வை
மீள மீள எடுத்து செல்கிறாள்
மேலும் மேலும் மிடுக்கேற்றி கொல்கிறாள்

ஆனால் அவன் கீழ்க்கண்ட
குடும்ப குத்துவிளக்குடன் வாழ பழிக்கப்பட்டவன்
அன்பு மிகவுடையாள்
அச்சம் மடம் நாணம் பயிற்பு உடையாள்
மரபைப் பேனுபவள்
வகைவகையாய் பரிமாறுபவள்
ஆசைகளை அடக்கத் தெரிந்தவள்

காதல் விடுத்தோ காமம் விடுத்தோ
இரண்டும் விடுத்தோ
முடிச்சில் வாழ்வார் வாழ்வார்
உறவில் வாழ்வார் வாழ்வார்
பொருளில் வாழ்வார் வாழ்வார்
மகவில் வாழ்வார் வாழ்வார்
பண்பாட்டில் வாழ்வார் வாழ்வார்

ஆசைகளற்று வாழ்வாரும் உளர்
கடமைக்கேற்று வாழ்வாரும் உளர்
”ஐ லவ் யூ” இங்கு வேறு வாயற்றவை
முத்தங்கள் அவ்வளவு அருவறுப்பானவை
தொடுகை மிகவும் எரிச்சலூட்டுபவை
புணரும் நோக்கு கொலைவெறி தூண்டுபவை

நயன்தாரா நினைவினிலே
பயன்தராமல் வாழும் இவனை
இச்சமூகம் என்ன செய்துவிடும்
இச்சட்டம் என்ன செய்துவிடும்