பிற்காலத்தில்
பெயர் சொல்லும்படியாக
விரிவான கொள்கைநெறியுடன்
ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்கலாம்…
முடியாமற் போனால்
ஓரிரு கவித்தொகுப்புகளைப்
பிரசுரிக்கலாம்…
செத்தப்பிறகு கொல்லிப்போட,
கண்ணீர்விடக்கூட
ஆளிருக்கும்…
பிறக்காமலிருக்க
எனக்கொன்றுமில்லை.
என் மனைவி பங்கேற்கும்
மணவீட்டில்
அதிகம் பேசும்
உறவினர்களின் வாயடைக்க
ஒரு ஒட்டு பிளாஸ்த்திரி
பிறக்க வேண்டும்…
அப்படியே அட்வைஸ்களின்
நாவறுக்க
அவளுக்கொரு கூர்வாள்
பிறக்க வேண்டும்…
அவள் நீலநிற ஸ்கூட்டியில்
எழுத
ஒரு தமிழ்ப்பெயர்
பிறக்க வேண்டும்…
என் அம்ம முகத்திலும்
அவ அப்பன் முகத்திலும்
ஒரு சொரிநாய் முத்திரம்
பெய்யட்டும்
இப்போது அவர்களுக்கது
தேவையாயிருக்கிறது
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக