13 பிப்ரவரி 2020

குண்டுக்கல் தீனிவாசன் தன்னிலை விளக்கம்

சத்தியமாய் நம்பலாம்
நான் எப்போதும் குனிந்தவனில்லை
அதிகாரத்தின் படிகளில்கூட
நெடுஞ்சாண்கிடையாகத்தான் ஏறினேன்
என் நெற்றியிலுள்ள தழும்புகள்கூட
நிமிர்ந்தே சென்றதால்
தலை முட்டியதில் ஏற்பட்டதுதான்

அடுத்தவன் மலத்தைச் சப்பித்தின்னும்
பன்றிகள் வானம் பார்ப்பதும்
அடுத்தவன் வளத்தைச் சுரண்டித்தின்னும்
தொன்றிகள் நிலம் பார்ப்பதும்
கொஞ்சம் கடினம்தானே

ஒற்றைத் துண்டில் ரெட்டை இருக்கை
பேரக்குழந்தைகளின் மெத்தை
குப்புர விழுந்தாலும் மீசையின் அரண்
உலக உருண்டையின் தத்துவம்
விநாயகரின் தெய்வாம்சம்
இது வாழ்நாள் கர்ப்பம்
இருந்தும் இப்படியா கலாய்ப்பது
என் அசெளகரியம் பாராமல்
இதுவும் ஓர் ஊனமென விட்டுவிடுங்கள்

நின்ற கோலமும் வசமில்லை
கிடந்த கோலமும் வசமில்லை
உப்பிய வயிற்றோடு எப்படி புணர்வது
டேய் தம்பி இங்க வாடா
இந்த அன்னியை மட்டும்
கொஞ்சம் செஞ்சிவிடு
நான் இன்சியல் போட்டுக்கொள்கிறேன்

ஊடக சொரிநாய்களும்
சமூகதள வெறிநாய்களும்
கடிக்கத் துரத்துகின்றன
உப்பிய வயிற்றோடு எப்படி குனிவது
டேய் தம்பி இங்க வாடா
அந்த கல்லை மட்டும்
கையில் எடுத்துக்கொடு
நான் ஓங்கி எறிந்துக்கொள்றேன்

- மகேஷ் பொன்



கருத்துகள் இல்லை: