04 ஏப்ரல் 2017
02 ஏப்ரல் 2017
பின்நவினக் கவிஞன்
இது;
ஆதவன் தீட்சண்யா கவிதை
மாலதி மைத்ரி கவிதை
கண்டராதித்தன் கவிதை
விக்ரமாதித்யன் கவிதை
இசை கவிதை
சில்வியா கவிதை
கரிகாலன் கவிதை
கலாப்பிரியா கவிதை
வைரமுத்து கவிதை
தாமரை கவிதை
பாரதிநிவேதன் கவிதை
தபூ சங்கர் கவிதை
இது
சங்கக் கவிதை என்றும்
படித்தவுடன்
விளங்கிக்கொள்கிறான் -
ஒரு
நல்ல வாசகன்….
அவனவன்
கவிதைக்கென
தனித்தனி
நடையும் லயமும் இருப்பதால்
பெயரிடா
கவிதையிலும்
ஆசிரியனின்
அடையாள மறுப்பு
அம்பலம்
எறுகிறது…
அனுபவியா
கவிதையிலும்
படைப்பாளனின்
மரணம்
புத்துயிர்
பெறுகிறது…
பின்நவினக்
கவிதை வேண்டுமெனில்
கவிஞன்
அல்லாதவன் எழுதிய
கவிதைகளைத்தான்
பயில வேண்டும்...
மறக்கவொன்னா மழை நினைவு
இந்த மழைதான் நிலம் தப்பி
பெய்தது…
இந்த மழைதான் பருவம் தப்பி
பெய்தது…
இந்த மழைக்குதான் ஓடி
ஒளிந்தோம்…
இந்த மழைக்குதான் கூடிக்
களித்தோம்
இந்த மழையால்தான் காய்ச்சல்
வந்தது…
இந்த மழையால்தான் காய்ச்சல்
நின்றது…
இந்த மழைதான் வாழ்வில் வளம்
சேர்த்தது..
இந்த மழையை வெறுத்த சிலர்;
தேவையற்ற நீர்வரவு
என்றார்கள்…
நிறுத்தச் சொல்லி மனு
கொடுத்தார்கள்…
இக்கழுதைகளைப்
பிரித்துவைத்தார்கள்
மழையோ பெய்யோ பெய்யென
பெய்தது…
இந்த மழையை கட்டுக்குள்
கொண்டுவர
ஊர்கூடி, மூன்று
முடிச்சியில் கட்டினார்கள்
ஒரு பேரிடியுடன் மழை
நின்றது…
எல்லோரும் உறங்கும் ஓரிரு
இரவில்
இந்த மழை மீளப்பொழிவதை
உணர்ந்த நாங்கள்
பெய்யென பெய்த மழை
நினைவுடன்
சாரலிலும் தூரலிலும்
நனைகிறோம்…
இது ஊருக்கு எதிரானதுதான் -
இருந்தும்
நிரம்பத் தேங்கிக்கிடக்கும்
இந்த மழைநினைவை
இருவர் மட்டும்தானே
இறைக்கிறோம்!
11 பிப்ரவரி 2017
எல்லாமுமாய் இருக்கிறாள் என்னுடன் இல்லாமல்...
நிவிதான் என் தாய்
நிவிதான் என் தந்தை
நிவிதான் என் சகோதரி
நிவிதான் என் சகோதரன்
நிவிதான் என் அத்தை
நிவிதான் என் மாமா
நிவிதான் என் சித்தி
நிவிதான் என் சித்தப்பா
நிவிதான் என் பெரியம்மா
நிவிதான் என் பெரியப்பா
நிவிதான் என் மச்சான்
நிவிதான் என் மதனி
நிவிதான் என் மாப்பிள்ளை
நிவிதான் என் கொளுந்தியா
நிவிதான் என் மூத்த மகன்
நிவிதான் என் இளைய மகள்
நிவிதான் என் நண்பி
நிவிதான் என் நண்பன்
நிவிதான் என் உலகம்
சிந்தனை-
கொள்கை-
நம்பிக்கை-
லட்சியம்-
குணம்-
எல்லாமும் இருவருக்கும் ஒன்றுதான்
சாதி, மதம் உட்பட...
ஆயினும்
28 ஜனவரி 2017
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






