வாசலிலே ஒரு வெண்ணிலா
அமலா
மந்திர புன்னகை
நதியா
அத்த மக ரத்தினமே
ரஞ்சிதா
உள்ளத்தை அள்ளித்தா
ரம்பா
வசிகரா சினேகா
குட்டி ஸ்ரேயா
கல்லூரி தமன்னா
மைனா அமலாபால்
குட்டிபுலி லட்சுமிமேனன்
தி.மு. வரை
ரசிகன்தான் நான்!
”பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
எம்.ஜி.ஆர்
சிவாஜி
சிவாஜி
விஸ்வநாதன் ராமமூர்த்தி
இவர்கள் கலைத்துறை
சாதனையாளர்களா?”
”பாலாதானே இயக்குநர்
யாருங்க இந்த பாரதிராஜா
குற்றபரம்பரையில்
ஆர்யாவை நடிக்கவைப்பாரா?”
இங்ஙனம் வினவுவதால்
நான் விவாதிக்க
முயல்வேன்
அவளுக்கு விளக்கம்கூடத்
தேவைப்படாது.
தி.பி. யிலும் ரசிகன்தான் நான்!
தி.பி. யிலும் ரசிகன்தான் நான்!
இளையராஜா சண்டை இழுத்துவிடுகிறார்…
புலமைப்பித்தன் புலமை இழந்துவிட்டார்…
கவுண்டமணி கவுந்துகொண்டே கடந்துபோகிறார்…
சின்னக்குயில் சித்ராவும் பி.சுசிலாவும்
ஒரு நிமிடத்திற்குமேல் பாடமாட்டார்கள்…
ஆர்யா படம் பார்த்து
ஆர்யா பாடல் கேட்டு
ஆர்யா வசனத்துக்கு
கைத்தட்டி
ஆர்யா நகைச்சுவைக்கு
சிரித்து
ஆர்யா சண்டைக்கு
வெறித்து
ஆர்யா காதலுக்கு
உருகி
பழகிவிட்டது எனக்கு…
”நானும் ஆர்யா ரசிகன்தான்”
என்றாலும்
ஏற்கமுடியாமல்
சூர்யாவை பரிந்துரை செய்கிறாள்.
நான் ஆர்யாவுக்காக
படம் பார்த்தாலும்
என்னையும் நஸ்ரியாவையும்
இணைத்துப் பேசுகிறாள்.
நம்பிக்கைதானே
வாழ்க்கை
நான் நிரந்தரமாக
ஆர்யா ரசிகன்தான்
என் மனைவிக்கு
மட்டும்.
மற்றவர்களுக்கு
ஓர் உண்மையைச் சொல்கிறேன்
சற்றுமுன்பு நான்
சமந்தா ரசிகன்!
இப்போது நான் நயன்தாரா
ரசிகன்!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக