06 ஏப்ரல் 2016

தொடர்பு எல்லைக்கு வெளியே

மனைவிக்கு பிடித்த
சரவண காந்தியை
கணவனுக்கும் பிடித்திருக்கிறது…
கணவனுக்கு பிடித்த
நித்ய ஜெயந்தியை
மனைவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை…
கணவன் மீதுள்ள நம்பிக்கை
பெண்கள்  மீதுள்ள நம்பிக்கை
அவநம்பிக்கை எதுவெனத் தெரியாது.
”பண கஷ்டத்தில் உதவுகிற
ஒரு நண்பன் இருக்கலாம்…
என்ன கஷ்டத்தில் உதவினாலும்
ஒரு நண்பியும் இருக்கக் கூடாது.”
ஆணைக்கினங்க
உடன் ஊர் சுற்றிய இளைய வட்டமும்
காதல் பேசிய காளையர் வட்டமும்
கவிதை பேசிய இலக்கிய வட்டமும்
கம்யூனிசம் பேசிய புரட்சி வட்டமும்
தொடர்பு எல்லைக்கு வெளியிலிருக்கும் -
கணவனின் நட்பு வட்டமாம்!





கருத்துகள் இல்லை: