முக சவரம் செய்தலையும்
முடி வெட்டுதலையும்
வீண் செலவென விட்டுவிட்டு
புத்தகங்கள் வாங்குபவன் நான்.
உணவும் உடையும்
குறைப்பட்டுப் போனதற்காக
ஒருபோதும் வருந்தியதில்லை
ஆயினும்
இரவு படிப்புக்கு மின்விளக்கும்
புத்தகங்கள் அடுக்க ஓர் அலமாரியும்
இல்லாமல் போனதற்காக
பெரிதும் வருந்துகிறேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக