25 நவம்பர் 2014

உணவக யாசகன் அல்லது உணவுக்கே யாசகன்

சோற்றில் உப்பில்லை…
குழம்பில் காரமில்லை…
அவியலில் ருசியில்லை…
என சொல்ல கேட்க்கையில்
எனக்கு கோபம் வருகிறது-
ஏனெனில்
எனக்கான உணவில்
எப்போதுமே அன்பில்லை!

அரை வயிற்றுக்கு உண்பவனை
யோகி என்பார்கள்…
குறை வயிற்றுக்கு உண்ணும் நான்
யோகியோ ஞானியோ அல்லன்-
ஏனெனில்
பெரும் பசியோடும்
குறும் பணத்தோடும்
நாளும் வயிறு நிரப்பும்
ஓர் உணவக யாசகன் நான்!

மிச்சம் வைத்த எச்சில் உணவை
கூச்சமின்றி உண்பதால்
சிலநேரம் நாயினும் கீழாகி போகிறேன்
ஏனெனில்
ஏழு நாட்களும் எலும்புக்கறி…
பால், முட்டை, பிஸ்கட்… -
என உணவுமுறை இருக்கிறது
என் உறவினர் வீட்டு நாய்களுக்கு!



கருத்துகள் இல்லை: