30 டிசம்பர் 2013

எனது வேலை; காதலிப்பது.

"என்னவளின்
அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
நேரில் வந்து பார்த்துவிட்டுப் போங்கள்
அவளின் முகவரி;
    அழகுத்தெரு,
    அழகூர்,
    அழகு மாவட்டம்.
அவளை ஒருமுறைப் பார்த்துவிட்டால்
இப்பிறவியின் பயனை அடைந்துவிடுவீர்கள்."-
இப்படியாக நான் அவள்  குறித்து
பிதற்றிக்கொண்டும்
புலம்பிக்கொண்டும்
லூசாகத் திரிகிறேன்...
அவளோ 'வேலைவெட்டி இல்லாதவன்'- என்று
என்னை காதலிக்க மறுத்துவிட்டாள்...
அவளுக்கு எப்படி புரிய வைப்பது
என் முழுநேர வேலையே
அவளைக் காதலிப்பதுதான் என்று?


25 டிசம்பர் 2013

இயேசுவின் இரத்தம் ஜெயம்

"கர்த்தரின் வருகை சமிபமாய் இருக்கிறது"-
என்பது வெறும் வார்த்தையாகதான் இருக்கிறது.
கர்த்தாவே விரைவில் வாரும்
உம்மை மீண்டும் சிலுவையில் அறைந்து
இரத்தம் சிந்த வைக்க காத்திருக்கிறோம்...

உன்னுடைய இரத்தமும்
என்னுடைய இரத்தமும்
"A" , "B" அல்லது "O " பாசிடிவாக இருக்கலாம்
ஆனால்
இயேசுவின் இரத்தம்
பாவத்தைக் கழுவுற பாசிடிவ்...
உலகில் பாவங்கள் பெருகிவிட்டனவே
ஆதலால் அனைத்து பாவங்களையும்
அவரின்   இரத்தத்தால் கழுவிக்கொள்வோம்..





23 டிசம்பர் 2013

தற்குறிப்பேற்றம்

நீ கடலாடி கரையேறுகிறாய்
பள்ளத்தைப் பார்த்துப் போகும் வெள்ளம்
உன்னிடம் உள்ளதைப் பார்த்துவிட்டு
உன்னுடன் வந்துவிடவேண்டி
கரையை உடைக்கத் தொடங்குகிறது
இனி அலைகள் ஓயாது.

மொழியின்றி வாசித்தல்

இதழ்கள் வாசிக்கும் பழக்கமுள்ள எனக்கு
வார இதழ்
மாத இதழ்
காலாண்டு இதழ்
அரையாண்டு இதழ்
எல்லாம் வாசிக்க கிடைக்கின்றன
தினசரிகள் வாய்ப்பதில்லை..

21 டிசம்பர் 2013

18 டிசம்பர் 2013

கல்லூரிசாலை



தேவதைகள்-
கதைகளில் வருவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்
இப்போதுதான் வீதியில் உலவுவதைப் பார்க்கிறேன்...