உன் கையில்தான்
ரிமோட் இருக்கிறது
ஃபேவரைட் பட்டனை
அழுத்தினாலும்
பிரசங்கம் மாறுவதில்லை
எதை நீ தின்ன வேண்டுமென
எதை நீ பேல வேண்டுமென
அது திரும்ப திரும்பச்
சொல்ல
அதையே தின்று அதையே
பேல்கிறாய்
ஓயெலெக்சில் டெல்டா
டாய்லெட் ஆகிறது
ஆமேசானில் தண்ணீர்
டப்பாவில் வருகிறது
இனி குண்டி கழுவாமல்
பீ காய்வதற்கு
நீ மட்டுமே காரணமல்ல
நெட்வொர்க் ப்ராபளம்தான்
காரணம்
அண்டர்வியர் முதல்
ஆண்ட்ராய்டு முடிய
நீங்கள் பேசும்
சுயச்சார்பில்
நிர்வாணம் மட்டுமே
மிஞ்சுகிறது
ஆயினும்
என் நிலம் என்னிடம்
இருக்கிறது
என் நதி என்னிடம்
இருக்கிறது
என் காற்று என்னிடம்
இருக்கிறது
என் வானம் என்னிடம்
இருக்கிறது
அதுவும் அப்படியே
இருக்கிறது
நான் காட்டுவாசியாய்
இருப்பதனால்
இத்தேசத்து மக்களின்
சோற்றில்
மண்ணை அள்ளிப் போட
வேண்டாம்
மும்மாரி பொழியவும்
விளையவும்
காடு வேண்டும்
அதை விட்டுவிடுங்கள்
எனது கோவணத்தை
உருவிவிட்டு
ஜாக்கி ஜட்டியைத் தர
வேண்டாம்
நான் காட்டுவாசியாய்
இருப்பதற்கு
காடு வேண்டும்
அதை விட்டுவிடுங்கள்
ஜி! அந்த கோவணத்தை
வேண்டுமானால்
நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்
நான் காட்டுவாசியாய்
இருப்பதற்கு
காடு வேண்டும்
அதை மட்டும் விட்டுவிடுங்கள்
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக