பாலுக்காக அழும்
குழந்தையின் பசிதான்
மிகக் கொடிய நோய்
ஊழிகாலத்தில்
ஊர் தொலைவிலிருப்பதுதான்
மிக வலிய ரணம்
வறுமையின் பிடியில்
இருத்தும் தனிமைதான்
மிகப் பெரிய சமூகவிலக்கல்
எங்கள் வீட்டிலிருப்பது
அட்சயப்பாத்திரம்
அல்ல
வெறும் ஈயப்பாத்திரம்தான்
அது நேற்றிலிருந்து
ஈஈயென இளிக்கிறது
இப்போது நான் வெளியேற வேண்டும்
இப்போது நான் வெளியேற வேண்டும்
கார்பன்மோனாக்சைடை
சுவாசிக்க முடிகிறது
ரசாயனத்தை குடிக்க
முடிகிறது
பிளாஸ்டிக்கை திண்க
முடிகிறது
கார்ப்ரேட் தொற்றை
சமாளிக்க முடிகிறது
ஒரு வைரசுடன் வாழ
முடியாதா
இப்போதே நான் வெளியேற
வேண்டும்
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக